கட்டப் பஞ்சாயத்து எஸ்.பி: உதவிக்கு டிஎஸ்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் கட்டப் பஞ்சாயத்து செய்வதாக கூறிஅவர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் சங்கர். ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார். இவர்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஸ்ரீபெரும்புதூரில் நிலங்கள் வாங்க, விற்க எனக்கு பலமுறைசிவ பிரசாத் உதவியுள்ளார்.

அவர் மூலம் நான் பல நிலங்களை வாங்கி விற்றுள்ளேன். கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்குப் பிறகு சென்னைநகரைச் சேர்ந்த பலரும் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் வாங்க விரும்புகின்றனர். இதனால் ஸ்ரீபெரும்புதூரில் நிலங்களின் விலைகிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து என்னை அணுகிய சிவபிரசாத், தான் ஏற்கனவே குறைந்த விலைக்கு விற்ற நிலங்களை திருப்பித் தருமாறுகேட்டார். அதற்கு நான், அந்த நிலங்களை விற்று விட்டேன். அதை வாங்கியவர்கள் திருப்பித் தர மாட்டார்கள் என்று கூறினேன்.

இதனால் ஆத்திரமடைந்த சிவபிரசாத், திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், துணைகண்காணிப்பாளர் முனியப்பன் ஆகியோரை அணுகி என் மீது பொய்யான புகார்களைத் தெரிவித்தார்.

இதையடுத்து இரு அதிகாரிகளும் என்னை பலமுறை தங்களது அலுவலகங்களுக்கு அழைத்து சிவபிரசாத்திடம் வாங்கியநிலங்களை திருப்பித் தருமாறு கட்டப் பஞ்சாயத்து செய்தனர். நான் மறுக்கவே, தொடர்ந்து மிரட்டும் தொனியில் அவர்கள்வற்புறுத்தி வருகிறார்கள்.

கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில்கடுமையாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உயர் காவல்துறை அதிகாரிகளே கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதால் எனதுதொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இரு அதிகாரிகள் மீதும் உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சங்கர். இந்த மனுவைவிசாரணைக்கு ஏற்ற நீதிபதி முருகேசன், இன்னும் 2 வாரங்களில் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா, டிஜிபி அலெக்சாண்டர், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி, டி.எஸ்.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+