விளக்கம் கேட்டா சொல்லனும்: ஜெவுக்கு டி.ஆர்.பாலு பதில்
சென்னை:
மாநில அரசின் திட்டங்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டால் அந்த மாநில அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்என்று முல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பதில் கூறியுள்ளார்.
சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் மத்திய திமுக அமைச்சர் ராசா இடையூறு செய்வதாகமுதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும், தமிழக அரசின்முயற்சிகளுக்கு தொடர்ந்து இடையூறாக இருந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். சென்னையில் மத்திய அரசின் சார்பில்ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து டி.ஆர்.பாலு பேசுகையில், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒரு செத்துப் போன செய்தி. இதற்குஏன் பத்திரிக்கைகள் திரும்பத் திரும்ப உயிரூட்டி அதை பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.
மத்திய அரசு, மாநில அரசிடம் விளக்கம் கேட்டால் அதற்கு மாநில அரசு பதில் அளித்துத்தான் ஆக வேண்டும். நியாயமான,நேர்மையான சந்தேகங்களை மட்டுமே நாங்கள் மாநில அரசுகளிடம் கேட்கிறோம். எந்தத் திட்டத்தையும் முடக்கும் எண்ணம்எங்களுக்கு இல்லை.
நீலகிரி மாவட்டம் பைகாராவில் மாநில அரசு மேற்கொள்ளும் மின் திட்டத்திற்கு நான் அனுமதி அளிக்க மறுத்ததாக ஜெயலலிதாகூறியுள்ளார். உண்மையில் நடந்தது என்னவென்றால், அதிக அளவில் மரங்களை வெட்டாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்றமுடியுமா என்பதை விளக்குமாறு கோரி நான் மாநில அரசுக்கு கடிதம் அனுப்பினேன்.
அந்தக் கடிதத்திற்குப் பதில் அனுப்புவதை விட்டு விட்டு, நேராக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்குப் புகார் தெரிவித்துஜெயலலிதா கடிதம் எழுதினார். பின்னர் நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகி விட்டேன். அதற்குப் பிறகு வந்த அமைச்சர்அத்திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
அந்த நிலையில்தான் மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி இத்திட்டம் தொடர்பாக முறையிட்டிருந்தது.
தமிழக அரசின் திட்டங்களை முடக்க வேண்டும் என்ற வெறியில் நாங்கள் யாரும் செயல்படவில்லை. மத்திய அரசு கேட்கும்நியாயமான விளக்கங்களைக் கொடுத்தால் அனுமதி கிடைப்பதில் எந்தத் தாமதமும் ஏற்படாது என்பதை மாநில அரசு தெளிவாகபுரிந்து கொள்ள வேண்டும் என்றார் பாலு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications