குடிக்க காசு தராததால் தாயைக் கொன்ற கொடூரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே திருமுல்லைவாயில் பகுதியில் குடிப்பதற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்த இளைஞர் தனது தாயை கை,கால்களைக் கட்டி அடித்துக் கொன்று, சாக்கு மூட்டையில் போட்டு விட்டு தப்பியது அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே உள்ளது திருமுல்லைவாயில். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி சாலம்மாள்.இவர்களுக்கு பிரகாஷ், தனஞ்செழியன் என இரு மகன்கள் உள்ளனர். பத்மநாபன் மனைவியுடன் கருத்து வேறுபாடு கொண்டுபிரிந்து வாழ்ந்து வருகிறார்.

57 வயதான சாலம்மாள் செங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். மூத்த மகன் பிரகாஷ்திருமணமாகி வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வருகிறார்.

இளைய மகன் தனஞ்செழியன் 10வது வரை மட்டுமே படித்துள்ளார். வேலை எதையும் பார்க்காமல் அம்மாவின் பணத்தில்வாழ்ந்து வந்த அவர் ஊதாரித்தனமாக சுற்றி வந்தார். குடிப்பழக்கம் உடைய தனஞ்செழியன் தினசரி குடிக்க பணம் கேட்டு தாயைதொல்லைப்படுத்தி வருவாராம்.

தன்னுடன் இருப்பது இவன் மட்டும் தானே என்ற ஆதங்கத்தில் அந்தத் தாயும் எதுவும் பேசாமல் பணத்தைக் கொடுத்துவந்துள்ளார். ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார் தனஞ்செழியன்.

வருஷப் பிறப்பன்றும் கூட குடிக்க வேண்டுமா என்று கேட்டு பணம் தர மறுத்துள்ளார் சாலம்மாள். இதனால் ஆத்திரமடைந்ததனஞ்செழியன், பெற்ற தாயின் கை, கால்களைக் கட்டி அடித்தே கொன்றுள்ளார்.

பின்னர் சாலம்மாளின் உடலை சாக்குப் பையில் கட்டி மூட்டை போல வீட்டின் ஹால் பகுதியில் போட்டு விட்டு அங்கிருந்துதப்பியோடி விட்டார். கடந்த 6 நாட்களுக்கும் மேலாக சாலம்மாளின் பிணம் வீட்டில் கிடந்ததால், துர்நிாற்றம் வீசத் தொடங்கியது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து வீட்டுக் கதவைஉடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது தான் சாலம்மாள் கொலை செய்யப்பட்ட விஷயம் தெரிய வந்தது. பெற்ற தாயையேஇப்படிக் கொடூரமாக கொலை செய்து விட்ட தப்பிய தனஞ்செழியனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+