சட்டசபைக் கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடப்பு சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் 13ம் தேதியன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கியஅறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது உள்ளது 12வது சட்டசபையாகும். இந்த சபையின் ஆயுட்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. இந்தநிலையில் சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் 13ம் தேதி போகிப் பண்டிகையன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடர் பல்வேறு எதிர்பார்ப்புகளைஏற்படுத்தியுள்ளது. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால், இந்தக் கூட்டத்தொடரை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மும்முரமாக உள்ளன.

போகியன்று கூட்டம் கூட்டப்படுவதால் ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக திமுக, பாமக ஆகியவை அறிவித்துள்ளன. ஆனால்அதற்கு வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது, ஆளுநர் உரை முற்றிலும் ஆளுங்கட்சியின் பிரசார உரையாகவேஇருக்கும் என்று கருதுவதால் போகியை காரணம் காட்டி 13ம் தேதியன்று கூட்டத்தைப் புறக்கணிக்க திமுக, பாமக ஆகியவைமுடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அரசியல் கட்சிகளின் அணுகுறை இப்படி இருக்கையில் சமூகத்தின் சில தரப்பினர் இந்தக் கூட்டத் தொடரை தங்களுக்குசாதகமாக ஏதாவது நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் பார்க்கின்றனர். குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடந்த நான்கரை வருடங்களாக இவர்கள் படாதபாடு பட்டு விட்டார்கள். வேலை நிறுத்தம் செய்து, ஒட்டு மொத்தமாக டிஸ்மிஸ்ஆகி, பின்னர் ஒரு வழியாக மீண்டும் பணியில் சேர்ந்து,பல சலுகைகளை இழந்து தட்டுத் தடுமாறி அவர்கள் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர்.

இழந்த சலுகைகள் அனைத்தையும் மீண்டும் பெற அவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில்ஆட்சிக்கு வந்த புதிதில் பறிக்கப்பட்ட அத்தனை சலுகைகளையும், ஆட்சியை விட்டுப் போகும் போது அம்மா கண்டிப்பாகதிருப்பித் தருவார், அது குறித்து ஆளுநர் உரையில் ஏதாவது அறிவிப்பு வெளியாகலாம் என்று அவர்கள் பெரும் நப்பாசையில்உள்ளனர்.

இவர்கள் தவிர சாலைப் பணியாளர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மீண்டும் தங்களை வேலையில் சேர்க்கும் வகையில்அரசு அறிவிப்பு ஏதேனும் வெளியிடக் கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுக்கும் இந்த கூட்டத் தொடர் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை தவிர சென்னை மழை, வெள்ள நவாரண கூட்ட நெரிசல், அமராவதி ஆற்றுப்பால வழக்கு உள்ளிட்ட பல சூடானவிவகாரங்களும், விவாதத்திற்குக் காத்துக் கொண்டுள்ளன. மொத்தத்தில் இந்தக் கூட்டத் தொடர் பல சூறாவளிகளையும்,சுனாமிகளையும் சந்திக்க காத்துள்ளது என்றே கூற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+