ரேஷன் அரிசி விலை உயர்வு நிறுத்தி வைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரேஷன் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியத்தை ரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது மத்திய அரசு.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் கூடி, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்குரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியத்தையும், அளவையும் குறைக்க முடிவு செய்தது.

இதற்கு நாடு ழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக தலைவர் கருணாநிதி,பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை வாபஸ் பெறுமாறு கோரி பிரதமர், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்குக் கடிதம் எழுதினர்.

ரேஷன் பொருள் மானிய ரத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைக்கமத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார் கூறுகையில், அரிசி, கோதுமைபோன்றவற்றுக்கான விலை கடந்த 2000மாவது ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. 2003ம் ஆண்டு முதல் விலைஉயர்த்தப்படாமலேயே இருந்து வருகிறது.

இதனால் பெரும் நிதிச் சுமை ஏற்பட்டு அதை மத்திய அரசே முழுமையாக ஏற்று வருகிறது. இதனால் தான் இந்த முடிவைமத்திய அரசு எடுத்தது. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தாது. வறுமைக் கோட்டுக்குமேலே உள்ளவர்களுக்கு கூடுதல் செலவு ஆகும், அவ்வளவு தான்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இதுகுறித்து விளக்குவேன், பிரதமரிடம்நிலையை எடுத்துக் கூறுவேன். அதுவரை மத்திய அமைச்சரவை முடிவு ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் சரத்பவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+