மீண்டும் சென்னை வருகிறார் டாண்டன்
சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி. டாண்டன் மீண்டும் வருகிற 17ம் தேதி சென்னை வருகிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே மாத வாக்கில் நடைபெறும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம்தீவிரமாக இறங்கியுள்ளது.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன், கடந்த 9ம் தேதி கோவை வந்தார்.அங்கு ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய டாண்டன், பின்னர் மதுரையிலும், தொடர்ந்து சென்னையிலும்ஆலோசனையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து 3 வருடமாக ஒரே இடத்தில் பதவியில் இருக்கும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம்செய்ய உத்தரவிட்டார். இதனால் தமிழக அரசு கலகலத்துப் போயுள்ளது.
இந் நிலையில் டெல்லி திரும்பிய டாண்டன் மீண்டும் வரும் 17ம் தேதி சென்னை வருகிறார். முதலில் 16ம் தேதி புதுவைக்குசெல்லும் டாண்டன் அங்கு அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர்காரைக்காலுக்கும் அவர் செல்கிறார்.
புதுவை பயணத்தை முடித்து விட்டு 17ம் தேதி சென்னை வரும் டாண்டன் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்டஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த முறை தேர்தலில் யாரும் அத்துமீறலில் ஈடுபட்டுவிடாமல் தடுக்க மிகத் தீவிரமாக இருக்கிறார் டாண்டன். இதனால் பணபலம், அதிகார பலத்தை நம்பியிருந்த தரப்பு ஆடிப் போயுள்ளது.
50,000 வாக்குச் சாவடிகள்:
இதற்கிடையே தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு மாநிலம் முழுவதும் 50,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது 45,000 வாக்குச் சாவடிகள் உள்ளன. 1,500பேருக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற விகிதத்தில் தற்போது வாக்குச் சாவடிகள் உள்ளன. இது 1,200 பேருக்கு ஒரு சாவடி எனமாற்றியமைக்கப்படும்.
இதன் மூலம் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 50,000க்கும் மேலாக அதிகரிக்கும்.
வரும் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தங்களது பெயர்கள் சரியாகவந்திருக்கிறதா என்பதை வாக்காளர்கள் சரி பார்த்து விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்படும்.
ஜனவரி 23ம் தேதிக்குப் பிறகு புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரமாக்கப்படும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications