சட்டசபை 10 நாள் நடைபெறும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. 20ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிவாதங்களுக்குப் பதில் அளித்துப் பேசுகிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் கடைசிக் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி ஆளுநர்உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் காளிமுத்துவின் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவதுஎன்பது குறித்து விவாதித்தது. இக்கூட்டத்தில் 13ம் தேதி சபையை புறக்கணித்த திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்டஎதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின் போது இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தை ஒரு நாள் தள்ளி வைக்குமாறு எதிர்க்கட்சிகள் கோரின.ஆனால் அந்தக் கோரிக்கை ஏற்கப்படாத காரணத்தால் கூட்டத்திலிருந்து அவை பாதியிலேயே வெளிநடப்புச் செய்தன. மேலும்பட்ஜெட் மீதான விவாதத்தையும் புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

பின்னர் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் சபாநாயகர் காளிமுத்து செய்தியாளர்களிடம்பேசுகையில், கூட்டத் தொடர் மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். 16ம் தேதி காலை 10 மணிக்கு சபை மீண்டும் கூடும்.

அப்போது நான்கு முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், எம்ஜிஆர். நகர், வியாசர்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள், மழை, வெள்ளத்தில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டு இறந்தவர்கள்ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை வேறு அலுவல் இன்றி ஒத்திவைக்கப்படும். பின்னர் 17ம் தேதி காலைமீண்டும் சபை கூடும். அன்றைய தினம் கேள்வி நேரம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்ஆகியவை இடம் பெறும்.

ஆளுநர் உரை மீதான விவாதம் 19ம் தேதி வரை நடைபெறும். 20ம் தேதி விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில்அளிப்பார். மாலை 5 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 2006-07ம் ஆண்டுக்கான செலவு மானியக்கோரிக்கைகள் முன் வைக்கப்படும்.

21ம் தேதி கேள்வி நேரம், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 22ம் தேதி விடுமுறையாகும். பின்னர் 23ம் தேதிமுதல் 25ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம், கேள்விநேரம் இடம் பெறும். 25ம் தேதி விவாதத்திற்கு நிதியமைச்சர்பொன்னையன் பதில் அளிப்பார்.

26ம் தேதி குடியரசு தின விடுமுறையாகும். பின்னர் 27ம் தேதி சபை மீண்டும் கூடும். அன்று மானியக் கோரிக்கைகள் மீதுவிவாதம் நடைபெறும். பல்வேறு சட்ட முன் வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அன்றுடன் தொடர்முடிவடையும் என்றார் காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+