ஐஐஎஸ்சி: மேலும் ஒரு லஷ்கர் தீவிரவாதி கைது
பெங்களூர்:
பெங்களூர் இந்திய அறிவியல் மையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்றுகருதப்படும் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
வட கர்நாடகத்தில் பாகல்கோட் மாவட்டம் அல்மத்தியைச் சேர்ந்த ஹபீப் என்ற மெஹ்பூப் இப்ராகிமை போலீசார் நேற்று கைதுசெய்தனர். 35 வயதான இவனிடம் இருந்து வெடி மருந்துகள், சில முக்கிய ஆவணங்களும் பிடிபட்டுள்ளன.முன்னதாக ஆந்திராவின் நெலகொண்டா மாவட்டத்தில் வைத்து அப்துல் ரஹ்மான் என்பவனையும் போலீசார் கைது செய்தனர்.இவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சென்னையில் வைத்து பஷீர் கான் என்பவரைக் கைது செய்தனர். ஆனால்,பஷீருக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் என தெரிய வந்ததையடுத்து அவரை விடுவித்துவிட்டனர்.
ஆனால், அப்துல் ரஹ்மான் தொடர்ந்து போலீஸ் காவலிலேயே உள்ளார். இவரும் இப்போது பிடிபட்டுள்ள ஹபீபும் சேர்ந்துஅல்மாத்தி அணையையும் கெய்கா அணு மின் நிலையத்தையும் தகர்க்கத் திட்டமிட்டிருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
ஆனால், ஐஐஎஸ்சி மீது தாக்குதல் நடத்திய நபர் இன்னும் தங்களிடம் பிடிபடவில்லை என கர்நாடக மாநில டிஜிபி சியால்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications