ஜெவின் ஆடிட்டர், டாக்டர் வீடுகளில் வருமான வரி சோதனை- என்னையும் சிக்க வைக்க திமுக சதி
சென்னை:
எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த திமுக சதி செய்கிறது. இன்று எனது குடும்ப டாக்டர், ஆடிட்டர் ஆகியோரதுவீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுகவின் இந்தச் சதிவெல்லாது என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று பல ஆடிட்டர்கள் மற்றும் டாக்டர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைநடத்தினர். மொத்தம் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஜெயலலிதாவின் ஆடிட்டர்மற்றும் அடக்கம்.
இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுகஉறுப்பினர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், அதிமுக அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது அதிமுக அரசு அல்ல. திமுகவும், அதன்கூட்டணிக் கட்சியான காங்கிரஸும்தான் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கின்றன.
முந்தைய திமுக ஆட்சியில் என்னை எந்தெந்த வழியில் எல்லாம் திமுக ஆட்சியாளர்கள் பழிவாங்கினார்கள் என்பதை மக்கள்அறிவர். அத்தனைக்குப் பிறகும் மக்களின் பேராதரவோடு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தேன்.
இப்போது எனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்துமாறு திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம்வருமான வரி அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்கிறார். ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் அதற்கு உடன்பட மறுத்துரெய்டு நடத்த மறுத்து விட்டனர்.
இதனால் அவர்களை பழனிமாணிக்கம் பந்தாடி வருகிறார், பழிவாங்குகிறார்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அடிக்கடி சென்னைக்கு வருகிறார், திமுக தலைவரை சந்திக்கிறார். இவர்கள் சந்திப்பின்போதுநாட்டுப் பிரச்சினை குறித்தா பேசப் போகிறார்கள்? என்னை எப்படியெல்லாம் பழிவாங்கலாம், எப்படியெல்லாம் வருமான வரிவழக்குகளில் சிக்க வைக்கலாம் என்றுதான் முக்கியமாக ஆலோசிக்கிறார்கள்.
என்னைப் பற்றி எப்படிக் கூறுகிறார்கள்? அந்தப் பொம்பளை என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அந்தப் பொம்பளையின்செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதை இப்படியே விட்டு விடக் கூடாது. என்னைப் பழிவாங்க வேண்டும் என்றுபேசுகிறார்கள்.
இதற்காகவே பழனிமாணிக்கம் வருமான வரி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஜெயலலிதாவீட்டில் ரெய்டு நடத்துங்கள் என்று கூறிக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஒரு மாநில முதல்வரின் வீட்டில் வருமான வரி ரெய்டுநடந்ததாக சரித்திரமே இல்லை என்று கூறி வருமான வரி அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் அதிகாரிகளை பந்தாடுகிறார், இடமாற்றம் செய்கிறார், இன்னும் பல வழிகளில்பழிவாங்குகிறார்.
இன்று கூட எனது வீட்டில் ரெய்ட் நடத்தச் சொல்லி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் இன்றுவரவில்லை. நாளை என்ன நடக்குமோ தெரியாது. ஆனால், இன்று என் குடும்ப டாக்டரின் வீட்டிலும், ஆடிட்டரின் வீட்டிலும்ரெய்டு நடந்து வருகிறது. காலை முதல் இந்த ரெய்டு நடக்கிறது. குடும்ப டாக்டர் மருத்துவமனைக்குப் போய் விட்டார். அவரதுமகன் பள்ளிக்கூடம் போய் விட்டான். அவரது மனைவி மட்டும் தனியே இருக்கிறார்.
இந் நிலையில் தன்னந்தனியே வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணியிடம் சோதனை என்ற பெயரில் தொல்லைப்படுத்திவருகிறார்கள். இப்படித்தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனியாக இருக்கும் ஒரு பெண்ணை நடத்துவதா?எனது ஆடிட்டர் இந்தியாவிலேயே மிகப் புகழ்பெற்ற ஆடிட்டர்களில் ஒருவர். அவரது பெயரைச் சொன்னாலே வருமானவரித்துறை அதிகாரிகளும், பிற ஆடிட்டர்களும் பயபக்தியுடன் வணங்குவார்கள். அப்படிப்பட்ட ஆடிட்டரின் வீட்டில் ரெய்டுநடத்தி வருகிறார்கள். இன்னும் கூட ரெய்டு நடந்து வருகிறது.
இவர்கள் செய்த பாவம்தான் என்ன, குற்றம்தான் என்ன.? எனக்கு வைத்தியம் பார்த்த குற்றத்தாலும், ஆடிட்டிங் செய்தகுற்றத்தாலும் இவர்கள் வீட்டில் ரெய்டு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. எனக்குவேண்டியவர்கள் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடத்துகிறார்கள்.
எனது வீட்டிலும் கூட ரெய்டு நடத்த துடியாத் துடிக்கிறார்கள். ரெய்டு என்ற பெயரில் வீட்டுக்குள் ஊடுறுவி, எதையாவது வைத்துவிட்டு, ஜெயலலிதா வீட்டில் இதைப் பிடித்தோம் என்று கூறி விளம்பரப்படுத்தி, எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டம்தீட்டி அலைகிறார்கள்.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் கூட்டத்தில் எல்லாம் இதைத்தான் பேசுகிறார்கள். பாமக தலைவர் ராமதாஸ் திமுகதலைவரிடம் பேசும்போதெல்லாம் அந்தப் பொம்பளையை அப்படிய விட்டு விடக் கூடாது. துகிலுரிந்து காட்ட வேண்டும்என்றெல்லாம் பேசுகிறார்.
பழிவாங்கப்படுகிறவர்கள் நாங்கள். நாங்கள் நல்லவர்கள். மக்கள் துணை எங்களுக்கு உள்ளது. ஆண்டவன் துணையாகஇருக்கிறார். என்ன வந்தாலும் அதை சந்திப்போம், வெல்வோம் என்று ஆவேசமாக கூறினார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications