நடப்பது வரி ஏய்ப்பு ரெய்டு: பழனி மாணிக்கம்
சென்னை:
தனது குடும்ப டாக்டர், ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் பழிவாங்கும் விதமாக சோதனை நடத்திவருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள புகார் தவறானது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம்கூறியுள்ளார்.
பழனி மாணிக்கத்தின் உத்தரவின் பேரில் தான் இன்று வருமான வரி அதிகாரிகள் தனது டாக்டர், ஆடிட்டர் வீடுகளில் ரெய்டுநடத்தி வருவதாகவும், எனது வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் புகார் குறித்து பழனி மாணிக்கம் கூறுகையில்,
சட்டசபையில் என் மீதும், எனது கட்சித் தலைவர் கருணாநிதி மீதும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்தும் தேவையில்லாத,அடிப்படையில்லாத குற்றச்சாட்டை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த வருமான வரி சோதனை எனது உத்தரவின் பேரிலோ அல்லது நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரிலோநடைபெறவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையின் நேரடி வரி விதிப்புத் துறை சமீபத்தில் சிலசோதனைகளை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாகக சென்னையைச் சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்றின் இயக்குனராக உள்ள டாக்டர், அதன் மூளையாகசெயல்பட்டு வரும் ஆடிட்டர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
இது ஒரு வழக்கமான வரி ஏய்ப்பு தொடர்பான சோதனையே தவிர இதில் எந்தவிதமான அரசியல் உள் நோக்கமும் கிடையாது.ஜெயலலிதா கூறியுள்ள புகார்கள் ஆதாரமற்றவை, அர்த்தமற்றவை என்று கூறியுள்ளார் பழனிமாணிக்கம்.












Click it and Unblock the Notifications