சுப. இளவரசனின் பரோல் ரத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழர் விடுதலைப் படைத் தலைவர் சுப.இளவரசனுக்கு சென்னை பூந்தமல்லி பொடாநீதிமன்றம் வழங்கிய பரோலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப.இளவரசன், பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரைப் பார்க்கதன்னை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பூந்தமல்லி பொடாநீதிமன்றத்தில் சுப. இளவரசன் மனு செய்திருந்தார்.
அதை ஏற்ற பொடா நீதிமன்றம் சுப. இளவரசனை ஒரு நாள் பரோலில் செல்ல அனுமதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசின்சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சம்பத்குமார், பூந்தமல்லிநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications