கள்ளச்சாராயம், கோழிக்கறி சாப்பிட்ட 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் கல்வராயன்மலை பகுதியில் விஷச் சாராயம் மற்றும் கோழிக்கறி சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மலை பகுதியில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், ஆண்டி உள்ளிட்ட 5 பேர் சாராயம் சாப்பிட்டுள்ளனர். அத்தோடுகோழிக்கறியும் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இவற்றை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஐந்து பேரும் சுருண்டு விழுந்து இறந்தனர். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸார் விரைந்தனர்.

சம்பவம் நடந்த கிராமத்திற்கு சாலையோ அல்லது போக்குவரத்து வசதியோ இல்லாததால், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்குபோலீஸார் நடந்து சென்று சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், இரு கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு இடையே நலவி வரும் போட்டியின் காரணமாக, ராமச்சந்திரன்உள்ளிட்டோர் அருந்திய கள்ளச்சாராயத்தில் இன்னொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் விஷத்தைக் கலந்து விட்டதாகத் தெரியவந்தது.

மேலும், அவர்கள் கோழிக்கறியை சமைப்பதற்காக பயன்படுத்திய எண்ணெயும் கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய் எனத்தெரிய வந்துள்ளது. எல்லாமுமாக சேர்ந்து 5 உயிர்களைப் பறித்துவிட்டது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு பீற்றிக் கொள்வதை நினைவில் கொள்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+