எனக்கு பதவி ஆசை இல்லை: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நானே திரும்பத் திரும்ப ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அதிமுக அரசை அகற்றக் கோரி ஜனநாயக முறையிலான விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை திமுக கூட்டணி மேற்கொண்டுள்ளது.இதன் தொடக்கமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடந்தது.

இதில் கருணாநிதி பேசுகையில், கூட்டணி கலகலத்து விட்டது என்று சிலர் பேசி வருகிறார்கள். பத்திரிக்கைகளும் யாருக்குஎத்தனை சீட் என்று கணக்குப் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியை நம்பாதே, ஏமாற்றி விடுவான்என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தின் வாயிலாக பிரகடனம் செய்கிறேன். நானே திரும்பவும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம்எனக்கு இல்லை. ஒரு நல்லாட்சியை தமிழகம் சந்திக்க வேண்டும், தமிழக மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ வேண்டும்என்பதுதான் எனது ஆசை.

நான் ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை? நான் உள்ளே சென்றால் என்ன செய்யலாம் என்று அதிமுகவினர் திட்டம் தீட்டியுள்ளனர்.அவர்களின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சட்டசபையில் பெரிய கொந்தளிப்பே ஏற்படும். அதற்கு நான் காரணமாகி விடக்கூடாது என்பதால்தான் நான் சபைக்கு செல்வதே இல்லை.

நானும், ராமதாஸும் ஜெயலலிதாவை துகிலுரிய வேண்டும் என்று பேசியதாக அவர் கூறியுள்ளார். அத்தனை பேர்முன்னிலையில், ராமதாஸ் அப்படிக் கூறியிருக்க மாட்டார். துயிலுரிய (தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டும்) என்று தான்கூறியிருப்பார்.

வெள்ள நிவாரண நிதியை தடுப்பதாக என் மீது குற்றம் சாட்டியுள்ளார். நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த பின்புதான்ரூ. 2,000 கோடி நிதியே வந்தது. நாங்கள் முயற்சி எடுத்ததன் விளைவாகத்தான் நிதி வந்தது.

ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவரின் மதுபான நிறுவனத்துடன் அவரது டாக்டர், ஆடிட்டர் ஆகியோருக்கு தொடர்புஇருந்ததால்தான் வருமான வரி சோதனையை நடத்தியுள்ளனர். இது இங்கு மட்டுமல்ல நடக்கவில்லை, இந்தியா முழுவதும்நடத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் பழனி மாணிக்கம் என்னிடம் விளக்கினார்.

வீட்டில் எதையாவது கொண்டு வைத்து விட்டு அதைப் பிடித்தேன், இதைப் பிடித்தேன் என்று கூறி விடுவார்கள் என கூறியுள்ளார்ஜெயலலிதா. அதாவது, அவரவர் மனதில் இருப்பதுதான் வார்த்தையாக வெளி வரும் என்று கூறுவார்கள். வைப்பது, பின்னர்எடுப்பது என்பதெல்லாம் யாருடைய பாணி என்பது மக்களுக்குத் தெரியும்.

திமுகவை நம்புங்கள், ஐயப்பாட்டுக்கு இடம் தராதீர்கள். மக்கள் விரோத அதிமுக ஆட்சி அகல வேண்டும். தமிழகத்திற்குவிடிவுகாலம் பிறக்க ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்றார் கருணாநிதி.

இக் கூட்டத்தில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜி.கே.மணி, நல்லகண்ணு, செளந்தரராஜன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிதலைவர்களும் பேசினர்.

இதேபோல, செங்கல்பட்டில் நடந்த திமுக கூட்டணி பொதுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸும், விருதுநகரில் வைகோவும்,திருச்சியில் ஜி.கே.வாசனும், வேலூரில் ஸ்டாலினும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+