ரூ. 2 கோடி கேட்டு மிரட்டும் டேஞ்சர் மேன்
சென்னை:
ரூ. 2 கோடி பணம் கொடுக்காவிட்டால் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்போம் என்றுமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலைய மேலாளர் பி.சி.ரங்கசாமிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் உடனடியாக ரூ. 2 கோடி பணம் தரவேண்டும். 23ம் தேதிக்குள் அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும். தவறினால், ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்துத்தகர்த்து விடுவேன் என்று மர்ம நபர் கூறியுள்ளார்.மேலும், நான் ஒரு சுயேச்சையாக இயங்கும் தீவிரவாதி. எந்தவித தீவிரவாதிக் கும்பலையும் சேர்ந்தவன் அல்ல. நான் யார்என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது பணத்தை நிச்சயம் தர வேண்டும். இல்லாவிட்டால் கண்டிப்பாக குண்டு வெடிக்கும்.இப்படிக்கு டேஞ்சர் மேன் வேதா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கு எப்போது பணத்தைத் தர வேண்டும் என்ற விவரம் எல்லாம் இல்லை.
இந்த மிரட்டல் குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன்போலீஸார் ரயில் நிலையம் முழுவதையும் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.
ரயல் நிலையம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டு வரும் பொருட்களை போலீஸார் தீவிரமாகசோதனையிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications