தயாநிதியை புறக்கணித்த அதிமுக ஆதரவு காங்.
சென்னை:
சென்னையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின்தலைமையில் நடந்த மத்திய அரசு விழாவில் தொகுதி காங்கிரஸ்எம்.எல்.ஏ.வின் பெயர் இடம்பெறாததால், காங்கிரஸ் கட்சியினர் விழாவைப் புறக்கணித்தனர்.
சென்னை பூக்கடை பகுதியில் உள்ள தபால் நிலையம் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மிகவும் பழமையான இந்ததபால் நிலையத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் அடிக்கல் நாட்டி, தபால்காரர்களுக்கு புதிய சைக்கிளையும்வழங்கினார்.
இந் நிகழ்ச்சி நடந்த தொகுதி பூங்கா நகர் ஆகும். இத்தொகுதியின் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தி ஆவார். காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த இவர் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளர். சமீபத்தில் ஜெயலலிதாவை பொதுக் கூட்டத்தில் வாழ்த்திப் பேசிய இவரைகாங்கிரஸ் கட்சியினர் கட்சி அலுவலகத்தில் வைத்து அடித்து, உதைத்து வேட்டியைக் கிழித்தனர்.
விநாயகமூர்த்தியின் அதிமுக ஆதரவு காரணமாக விழா அழைப்பிதழில் அவரது பெயரை திமுக தரப்பு தவிர்த்தது. அதேபோலமாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் மணிபால் பெயரும் இடம் பெறவில்லை.
இதனால் அந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. கூட்டணிக் கட்சியாக இருந்தும் காங்கிரஸ்கட்சிக்காரர்களை மதிக்காமல் விழா நடத்துவதா என்று கோபமடைந்த விநாயகமூர்த்தி ஆதரவு காங்கிரஸ் பிரமுகர்கள்,நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இந் நிகழ்ச்சிக்கு சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பலராமன் தலைமை தாங்கினார். ரூ. 45 லட்சம் செலவில் பூக்கடைதபால் நலையம் புதிய பொலிவுடன் கட்டப்படவுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications