வரதட்சணை கொடுமை: இளம் பெண் வங்கி மேலாளர் எரித்துக் கொலை
சென்னை:
வங்கி பெண் மேலாளரை வரதட்சணை கேட்டு எரித்துக் கொலை தொடர்பாக அவரது கணவர், மாமியார், மாமனார், கணவரின்தம்பி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் நியூ காலனியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 26). இவர் பாரிமுனையில் உள்ள யுடிஐவங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பலராமன் என்பவரது மகன்இலவணகுமாருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பிறகு வரதட்சணை போதாது, மேலும் பணம் வாங்கி வா என்று அம்பிகாவை அவர் கணவர் இலவணகுமார்மற்றும் அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்து வந்ததாக தெரிகிறது. குறிப்பாக இலவண குமாரின் அண்ணன்விஸ்வநாதன், தாய் எட்டியம்மாள், தம்பி சரவணன் ஆகியோர் அம்பிகாவிடம் அதிக பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவுசெய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அம்பிகாவின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது அம்பிகாவின் பெற்றோர்களிடம் இலவணகுமாரின் குடும்பத்தினர்தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நள்ளிரவு 3 மணி அளவில் அம்பிகா அவரது அறையில் தீயில் கருகி அலறித் துடித்து செத்தார். இதில் அவரதுவயிற்றில் இருந்த சிசுவும் பலியானது.
அம்பிகா தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அம்பிகாவின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.இதை அம்பிகாவின் பெற்றோர் ஏற்கவில்லை.
இது குறித்து அம்பிகாவின் பெற்றோர், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அம்பிகாவை அவரது கணவர்குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொன்றுவிட்டதாக அவர்கள் புகார் அளித்தனர்.
இகையடுத்து அம்பிகாவின் கணவர் இலவணகுமார், மாமனார் பலராமன், மாமியார் எட்டியம்மாள், சரவணன் ஆகிய 4 பேரும்கைது செய்யப்பட்டனர்.
இதில் இலவணகுமாரின் அண்ணன் விஸ்வநாதன் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அம்பிகாவின் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications