வள்ளுவர் பெயரில் விருது: கருணாநிதி கோரிக்கை
சென்னை:
தொல்காப்பியர், திருவள்ளுவர் பெயர்களில் செம்மொழி விருதுகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர்கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அஞ்சல் துறையின் உடனடி மணியார்டர் வசதி உள்ளிட்ட 3 திட்டங்களின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. மத்தியமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், ஆளுனர் பர்னாலா, கருணாநிதி, மத்திய தொலைத் தொடர்புத்துறைஅமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தின் நீண்ட காலக் கோரிக்கையான தமிழ் செம்மொழி கோரிக்கை நனவாகஉதவியர் அர்ஜூன் சிங். அவருக்கு தமிழர்கள் சார்பில் நன்றி. தற்போது செம்மொழி தமிழ் விருதுகளையும் வழங்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து எனக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், தொல்காப்பியர் விருது ஏற்படுத்தப்படவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியரோடு, திருவள்ளுவரையும் சேர்த்து அவரது பெயரிலும் ஒரு விருதை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்றுநான் கோரியுள்ளேன். ஆனால் திருவள்ளுவர் பெயரில் ஏற்கனவே தமிழக அரசு ஒரு விருதை வழங்கி வருவதால் மத்திய அரசுதயங்குகிறது.
தொல்காப்பியரும், திருவள்ளுவரும் தமிழர்களின் உள்ளத்தில், உணர்வுகளில் கலந்திருப்பவர்கள். எனவே வள்ளுவர் பெயரிலும்ஒரு விருது வழங்க வேண்டும் என்பது எனது ஆசை. மத்திய அரசு இதைப பரிசீலிக்க வேண்டும்.
இப்போது அறிமுகமாகும் மணியார்டரை மின்னல் மணியார்டர் எனலாம்.
மணியார்டரில் பணம் அனுப்பு, என்று தந்தைக்கு மகன் எழுதும் கடிதம் இடி கடிதம். அந்தக் கடிதத்தைக் கண்ட தந்தை இந்தமின்னல் மணியார்டர் மூலம் பணம் அனுப்பலாம் என்றார் கருணாநிதி தனக்கே உரிய பாணியில்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications