மிடாஸ் மதுபான நிறுவனத்தின் பெரும் வரி ஏய்ப்பு!
சென்னை:
சென்னை அருகே படப்பையில் உள்ள மதுபானத் தொழிற்சாலை, முதல்வர் ஜெயலலிதாவுக்கோ அல்லது அவரது தோழிசசிகலாவுக்கோ சொந்தமானது என்பதற்கு ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என சென்னை பிராந்திய வருமான வரித்துறைஆணையர் சந்தோஷ் தத்தா கூறியுள்ளார்.
பழைய படப்பை பகுதியில் மிடாஸ் கோல்டன் புரூவரீஸ் என்ற மதுபானத் தொழிற்சாலை உள்ளது. இங்கு ரம், பிராந்தி, விஸ்கி,பீர் உள்ளிட்ட 27 வகையான மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.இந்த மதுபானத் தொழிற்சாலையிலிருந்துதான் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன கடைகளுக்கு மது சப்ளை நடந்து வருகிறது.
இதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இதில் பெரும் பங்கு இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந் நிலையில் கடந்த 3 நாட்களாக இந்தத் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவந்தனர். மதுபானத் தொழிற்சாலையின் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் பிரபாகரன், ஆடிட்டர் நடராஜன் ஆகியோரது வீடு,அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
இந்த டாக்டர் ஜெயலலிதாலின் பர்சனல் டாக்டர் ஆவார். இந்த ஆடிட்டர் ஜெயலலிதாவின் ஆடிட்டர் ஆவார்.
இச் சோதனை குறித்து வருமான வரித்துறை ஆணையர் சந்தோஷ் தத்தா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போதுநிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கமும் உடன் இருந்தார்.
சந்தோஷ் தத்தா கூறியதாவது:
சென்னை அருகே படப்பை-காஞ்சிபுரம் சாலையில் சாலமங்கலம் என்ற இடத்தில் மிடாஸ் கோல்டன் மதுபான தொழிற்சாலைசெயல்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் (அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில்) இந்த தொழிற்சாலையில் அதிக அளவில்முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்குரிய கணக்குகளை வருமான வரித்துறையிடம் இந் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை. ஆனால், விற்பனை மூலம்வருமானம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆபரேஷன் டயட் என்று இதற்கு பெயரிடப்பட்டது. மதுபானத் தொழிற்சாலை, அதன் இயக்குனர்கள், முன்னாள் இயக்குனர்கள்,ஆடிட்டர் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
130 அதிகாரிகள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இங்கிருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை தீவிரமாகஆராய்ந்து வருகிறோம். ஆய்வுக்குப் பின்னர்தான் முழு விவரங்களையும் தெரிவிக்க முடியும்.
நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிக்கவே 3 மாதங்களுக்கு மேலாகும். அதன் பின்னர்தான் முதலீடுகள்முறையானவையா என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர இயலும்.
நிறுவனம் ஆரம்பித்த முதலாவது ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ. 146 கோடியாக இருந்தது.
அடுத்த ஆண்டே இது ரூ. 429 கோடியாக உயர்ந்துள்ளது. 3வது ஆண்டில் ரூ. 600 கோடியாக உயர்ந்துள்ளது. இப்படி அதிரடியாகவருமானம் உயர்ந்தது தொடர்பாக கணக்குகளை வருமான வரித்துறையிடம் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை.
மேலும் இந்த நிறுவனத்தில் பெருமளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. அது தொடர்பாகபல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளன.
சிலரது வங்கி லாக்கர்களையும் சோதனை செய்து பார்த்தோம். அதில் சோதனை நடத்தப்பட்ட ஒருவரது வீட்டிலிருந்து ரூ. 35லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ. 11 லட்சம் ரொக்கப் பணமும் சிக்கியது. இந்த நகை, பணத்துக்கும் அவரிடம் கணக்குஏதும் இல்லை.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் டாக்டர் சிவக்குமார், ராவணன், முன்னாள் இயக்குனர் கிட்டப்பா உள்ளிட்டோரின் வீடுகளில்சோதனை நடத்தப்பட்டது. டாக்டர் சிவக்குமார், முதல்வர் ஜெயலலிதாவின் டாக்டரா என்பது குறித்து எங்களுக்கு ஏதும்தெரியாது.
நிறுவன இயக்குனர்களின் முகவரியில் ஆடிட்டர் நடராஜனின் வீட்டு முகவரி இருந்ததால் அவரது வீடு, அலுவலகத்திலும்சோதனை நடத்தப்பட்டது.
ஜெ, சசிகலாவுக்கு சொந்தமல்ல:
இந்த நிறுவனம் பல்வேறு இயக்குனர்கள் கொண்ட குழுவால் இயக்கப்படுகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதாவுக்கோ,சசிகலாவுக்கோ நேரடி தொடர்பு ஏதும் இல்லை. அதேபோல, சசிகலாவின் உறவினர்களும் இதில் பங்கு பெறவில்லை என்பதுஆரம்ப சோதனையில் தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கும், இந்த ஆலைக்கும் தொடர்பு உள்ளதற்கு எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை.
வருமான வரி சோதனைக்கு முதலில் டாஸ்மாக் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பின்னர் அவர்கள் நல்லஒத்துழைப்பு அளித்தனர். இந்த சோதனையின் முடிவில் யாருக்கும் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பவில்லை.
ஆவணங்களை எல்லாம் ஆராய 3 மாதங்களுக்கும் மேலாகும் என்பதால் அதன் பிறகே யாருக்கு நோட்டீஸ் அனுப்புவது, யாரைவிசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியும்.
யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரிலும் இந்தச் சோதனை நடத்தப்படவில்லை. வரி ஏய்ப்புதான் இந்த சோதனைக்கு முக்கியக்காரணம்.
(முதல்வர் ஜெயலலிதா சொல்வது போல்) வருமான வரிச் சோதனை நடத்த முன் வராத அதிகாரிகள் யாரும் இடமாற்றம்செய்யப்படவில்லை. அவ்வாறு வெளியான தகவல்கள் தவறு என்றார் தத்தா.
இப்போதைக்கு ஆதாரம் இல்லை: அமைச்சர்
இதையடுத்து அமைச்சர் பழனி மாணிக்கம் கூறுகையில், இந்தப் பிரச்சினையை நாங்கள் அரசியலாக்கவில்லை. முதல்வர்தான்என்னைப் பற்றியும், எனது தலைவர் கருணாநிதியைப் பற்றியும் தவறாக சட்டசபையில் பேசினார்.
முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு தொடர்பான சோதனை இது. இயல்பான ஒன்று. போதிய ஆதாரங்களைத் திரட்டிய பிறகுதான்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஜெயலலிதா, சசிகலாவுக்கும் இந்த மதுபானத் தொழிற்சாலைக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த ஆதாரம்எதுவும் கிடைக்கவில்லை. அதற்காக தொடர்பு இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது.
சோதனை யாரால் நடந்தது என்பதுகுறித்து பார்க்கக் கூடாது. சோதனையின் பலன் என்ன, வெற்றியா, தோல்வியா என்பதைத்தான்யோசிக்க வேண்டும். இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. பெருமளவிலான வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications