சட்டமன்றத்தில் பெரும் அமளி: திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை :

கேபிள் டிவி சட்ட மசோதா தொடர்பாக சட்டசபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர்கள் அனைவரும்கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து காங்கிரஸ், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச்செய்தனர்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக உறுப்பினர் சேகர்பாபு எழுந்து, தமிழக ஆளுனரை திமுகதலைவர் கருணாநிதி சென்று சந்தித்தது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்குமாறு கோரினார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா எழுந்து பேசத் தொடங்கினார். அப்போது கருணாநிதி குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களுக்குதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

முதல்வர் தெரிவித்த கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்க அவர்கள் முற்பட்டனர். ஆனால் அதை சபாநாயகர் காளிமுத்துஅனுமதிக்கவில்லை.

அந்த சமயம் பார்வர்ட் பிளாக் உறுப்பினர் சந்தானம் எழுந்து, அவையின் நடவடிக்கையில் குறுக்கிடுவதாக கருணாநிதியின்செயல் அமைந்துள்ளது. எனவே அவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வருவதாகக் கூறினார்.

இந்தக் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்ட காளிமுத்து அதை அவையின் உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்குஅனுப்புவதாக அறிவித்தார். இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

கருணாநிதி குறித்த ஜெயலலிதாவின் பேச்சுக்கு தாங்கள் விளக்கம் அளிக்க அனுமதிக்காத காளிமுத்து, சந்தானத்தின்கோரிக்கையை எந்தவித பரிசீலனையும், விவாதமும் இன்றி உடனடியாக ஏற்று, உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதைக்கண்டித்தனர்.

அரசுக்கு எதிராகவும் காளிமுத்துவைக் கண்டித்தும் கோஷமிட்டபடி சபாநாயகர் இருக்கை முன்பு கூடி கோபத்துடன் பேசினர்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றுமாறு காளிமுத்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் அவையை விட்டு வெளியேற்றினர்.

எதிர்க் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்வது, அது குறித்து எதிர்க் கட்சியினர் பேச முயன்றால் அனுமதிக்காமல் காவலர்களைவிட்டு வெளியேற்றுவது என்ற சபாநாயகரின் செயலைக் கண்டிப்பதாகக் கூறி காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிகழ்ச்சிகளால் சபையில் பெரும் கூச்சல், குழப்பமாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+