வெள்ள நிவாரணத்தை எப்போதும் பெறலாம் : சட்டசபையில் ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வெள்ள நிவாரண உதவித் தொகையை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதாசட்டசபையில் கூறினார்.

சட்ட சபையில் இன்று பார்வார்ட் ப்ளாக் உறுப்பினர் சந்தானம் எம்எல்ஏ பேசும் போது, முதலமைச்சர் பல உதவிகளை செய்துவருகிறார்.

கொடுத்து உதவுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். வெள்ள நிவாரண உதவிகள் பல இடங்களில் திருப்தியாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் எங்காவது சிலருக்கு வெள்ள நிவாரண உதவி கிடைக்காமல் இருந்தால் அதையும் அவர்களுக்குகிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, வெள்ள நிவாரண உதவி எங்காவது யாருக்காவது விடுபட்டிருந்தால் அதைவழங்க வேண்டும் என்று உறுப்பினர் சந்தானம் கேட்டுள்ளார்.

வெள்ள நிவாரண உதவி பெற கடைசி தேதி இது தான் என்று அரசு எதுவும் நிர்ணயிக்கவில்லை. நிவாரண உதவி தேவைப்படும்மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்பது தான் இந்த அரசின் நோக்கம்.

எங்கள் நடவடிக்கைகளையும் மீறி எங்காவது, யாருக்காவது நிவாரண உதவி கிடைக்காமல் விடுபட்டிருந்தால் அவர்களைசட்டசபை உறுப்பினர்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரண உதவி வழங்கப்படும் என்றுகூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+