கோவில் தேர்களைப் பழுதுபார்க்க ரூ. 18 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில், பாழடைந்த நிலையில் இருக்கும் திருக்கோவில் தேர்கள் ரூ.18 கோடியில் சரி செய்யப்படும் என சட்டசபையில் இந்துஅறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், தமிழகத்தில் உள்ள திருக்கோவில்தேர்களைப் பழுது பார்க்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 18 கோடி நிதியை ஒதுக்கியுள்ளார்.
அதன் மூலம் பழுதடைந்து கிடக்கும் தேர்கள் சீர் செய்யப்படும். தமிழகத்தில் தற்போது 830 திருத் தேர்கள் உள்ளன. இதில் 438தேர்கள் நல்ல நிலையில் உள்ளன. 151 தேர்கள் பழுது சரி செய்யப்பட்டு விட்டன.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ. 77.14 லட்சம் செலவில் புதிய தங்கத் தேர்அமைக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications