ஜனவரி 26: டெல்லியில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்
டெல்லி:
இந்திய குடியரசுத் தினவிழாவை சீர்குலைக்க பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத் துறையினருக்குதகவல் கிடைத்துள்ளது.
டெல்லியில் ஒரே சமயத்தில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்ற சதித் திட்டத்துடன் லஷ்கர்-ஏ-தொய்பா,ஹிஸ் புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து ஊடுருவி உள்ளார்கள்.இவர்கள் வயர்லெஸ் போனில் பேசியதை இடைமறித்து கேட்ட உளவுத்துறையினர் டெல்லியில் தீவிரவாதிகள் எங்கெங்கு தங்கிஉள்ளார்கள் என்ற விபரங்களை தனியாக பட்டியலிட்டு தொகுத்துள்ளார்கள்.
உளவுத்துறையினர் கொடுத்துள்ள தகவல் படி லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 7 தற்கொலை தீவிரவாதிகள் கடந்தஆண்டே டெல்லிக்குள் வந்து விட்டனர். அவர்கள் நஜப்கர் பகுதியில் பதுங்கி உள்ளதாக உஷார் படுத்தப்பட்டுள்ளது.இவர்களுடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 தீவிரவாதிகள் சேர திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் நாசவேலை செய்வதற்கு முன்பே மடக்கிப்பிடித்து விட பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.இதனால் டெல்லியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரமாகநடந்து வருகின்றன.
இதை தொடர்ந்து டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை இந்த பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications