கருணா கும்பலை ஒடுக்க இலங்கைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
கொழும்பு:
ராணுவ ஆதரவுடன் இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் கருணா ஆதரவுப் படையினரை ஒடுக்க அந்நாட்டு அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் உடனே வன்முறையை நிறுத்துமாறு விடுதலைப் புலிகளையும்கோரியுள்ளது.
நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைமுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பர்ன்ஸ் கொழும்பு வந்துள்ளார்.சோல்ஹைம் புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஆகியோரை வன்னி பகுதியில்சந்தித்துப் பேசவுள்ளார்.இந் நிலையில் பர்ன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அதிகமான பொறுப்பு புலிகளுக்குத் தான் உள்ளது. இலங்கைஅரசுடன் தமிழ் மக்களுக்கு நியாயமான பிரச்சனைகள் உள்ளன. ஆனால், அதை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க வேண்டும்.வன்முறை அதற்கு தீர்வல்ல.
புலிகளுடன் எங்களுக்கு நேரடியாகத் தொடர்பில்லை. இதனால் அவர்களது செயல்களை வைத்தே அவர்களை நாங்கள் எடைபோட முடியும். ஆனால், கடந்த வாரங்களில் நடந்துள்ள கொலைத் தாக்குதல்களைப் பார்த்தால் புலிகள் வன்முறையைத் தூண்டமுயல்வதாகவே கருத முடியும்.
உலகின் எந்தப் பகுதியிலும் வன்முறை, தீவிரவாதத்தை அமெரிக்கா ஏற்காது. அதே போல வட கிழக்குப் பகுதியில் செயல்பட்டுவரும் ஆயுதம் தாங்கிய பாராமிலிட்டரிப் படையினரை (கருணா ஆதரவாளர்கள்) அரசு ஒடுக்க வேண்டும். அவர்களதுஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
தமிழர்களுக்கு எதிராக இந்தப் படையினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுக்க வேண்டும். அவர்கள் மீது சட்டப்பூர்வமானநடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசுத் தரப்பு அதிகாரிகளே கூட ஒப்புக் கொள்கின்றனர் என்றார்.
சோல்ஹைம் நிருபர்களிடம் பேசுகையில், இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதை தடுக்க முயல்வதே என் முதல்வேலை. இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளேன் என்றார்.


Click it and Unblock the Notifications
