மீண்டும் அரியலூர் மாவட்டம் கோரி வக்கீல்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
மீண்டும் அரியலூர் மாவட்டத்தை உருவாக்கக் கோரி அம்மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.ஆனால் அதற்குப் பின்னர் வந்த ஜெயலலிதா அரசு அரியலூர் மாவட்டத்தை மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைத்தது.
இதை எதிர்த்து அரியலூரில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் அரியலூர்மாவட்டத்தை உருவாக்கக் கோரி மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
தமிழக அரசின் நிதி நிலை சீரடைந்துள்ளதாக முதல்வரும், நிதியமைச்சரும் தொடர்ந்து கூறி வருவதால் மீண்டும் அரியலூர்மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications