கருணாநிதி தேர்தலில் போட்டியிட தடை கோரி மனு
சென்னை:
சட்டசபைக் கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல், எம்.எல்.ஏ பதவிக்கான சலுகைகளை மட்டும் அனுபவித்து வரும் திமுக தலைவர்கருணாநிதி வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்கள் சிலர் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் மனு கொடுத்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் இன்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை சந்தித்து மனுஒன்றைக் கொடுத்தனர். இதுகுறித்து வழக்கறிஞர் முருகராஜன் என்பவர் கூறுகையில், சேப்பாக்கம் தொகுதியிலிருந்துசட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திமுக தலைவர் கருணாநிதி.கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் சட்டசபைக் கூட்டம் எதிலும் கலந்து கொண்டு, மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கவில்லை.மாறாக, கூட்டத் தொடரின் போது சட்டசபை வளாகம் வரை வந்து கையெழுத்து மட்டும் போட்டு விட்டு போய் விடுகிறார்.
விவாதங்கள் எதிலும் கலந்து கொள்ளாமல், ஆனால் எம்.எல்.ஏ. ஊதியம் மற்றும் அதுதொடர்பான சலுகைகளை மட்டும்தவறாமல் அனுபவித்து வருகிறார்.
சட்டசபைக்கு செல்லாமலேயே இருந்து வரும், ஜனநாயக கடமையை ஆற்ற மறுக்கும் கருணாநிதி வருகிற சட்டசபைத் தேர்தலில்போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். அவருக்காக இதுவரை வழங்கி வந்த சம்பளம் மற்றும் சலுகைகளைதிரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நரேஷ்குப்தா, இந்த மனுவை தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைப்பதாகதெரிவித்ததாக முருகராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications