நாளை வைகோ நிலை தெரியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதிமுக சார்பில் புதன்கிழமை சென்னையில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், திமுகவுடன் நிலவும் பூசல் தொடர்பாகவும் முக்கியமாக குறிப்பிடலாம்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக 21 தொகுதிகளை கோரியது. ஆனால் அதைநிராகரித்த திமுக, 17 இடங்களை மட்டுமே தருவதாக கூறியது.

இதனால் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக. தனித்து தேர்தலை சந்தித்து அனைத்து இடங்களிலும்தோல்வியைத் தழுவியது.

தற்போதைய தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் மதிமுக இடம்பெற்றுள்ளது. அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு குறித்துதிமுக தலைமை எந்த அறிவிப்பையும் வெளியிடாவிட்டாலும் கூட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பூர்வாங்கபேச்சுக்களை முடித்து விட்டதாக தெரிகிறது.

இது கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பேச்சிலிருந்து தெரிய வருகிறது. குறிப்பாக மதிமுகவினர் தொகுதிப் பங்கீடு தொடர்பாகதிமுகவைத் தாக்கி பேசத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் கேட்ட இடங்களை திமுக தரவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறது.

எங்களது கெளரவம் பாதிக்கப்படாத வகையில் திமுக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று மதிமுகவின் முன்னணித்தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். அவர்களது கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத்தோ ஒரு படி மேலே போய்,கடந்த தேர்தலைப் போல கடைசி நேரத்தில் கழற்றி விட்டு விடலாம் என நினைத்து விட வேண்டாம்.

இந்தக் கூட்டணி இல்லாவிட்டால் வேற கூட்டணி (அதிமுக?) என்ற ரீதியில் பேசியுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியார்கள் கேட்டபோது, வைகோ இந்த நிமிடம் வரை எங்களது அணியில்தான் இருக்கிறார். கெளரவமான இடங்கள் கொடுக்காவிட்டால் தானே அவர் போவார் என்று பதில் அளித்தார்.

இப்படி திமுக கூட்டணியில் மதிமுகவின் நிலை, அவர்களுக்கு ஒதுக்கப்படக் கூடிய தொகுதிகள் குறித்து பல்வேறு செய்திகள்வெளியாகி வரும் நிலையில், வைகோ குறித்து கருணாநிதி வெளிப்படையாக தெரிவித்துள்ள கருத்துக்களின் பின்னணியில்வைகோவின் கருத்தை அறிய தமிழகமே ஆர்வமாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மதிமுக சார்பில் புதன்கிழமை வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் வைகோ பேசுகிறார்.

மதுரையில் அவைத் தலைவர் எல்.கணேசன், கோவையில் .கண்ணப்பன், செஞ்சியில் செஞ்சி ராமச்சந்திரன், ராஜபாளையத்தில்நாஞ்சில் சம்பத் ஆகியோர் பேசுகிறார்கள்.

சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு குறித்தும் வைகோ நிச்சயம் ஏதாவதுகூறுவார் என்பதால் பொதுக்கூட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+