டெல்லி வந்தார் சவுதி மன்னர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நான்கு நாள் பயணமாக சவுதி மன்னர் அப்துல்லா டெல்லி வந்து சேர்ந்தார். பீஜிங்கில் இருந்து நேற்று மாலை 7.15 மணிக்குபாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய சவுதி மன்னரை பிரதமர் மன்மோகன் வரவேற்றார்.

இன்று ராஷ்டிரபதி பவனில் அளிக்கப்படும் சம்பிரதாய வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர் சவுதி மன்னர் தனது அரசு ரீதியானபணிகளை மேற்கொள்கிறார்.

இன்று மதியம் பிரதமரை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்துஆலோசனை நடத்தப்படுகிறது. இதையடுத்து இரட்டை வரி ரத்து, தீவிரவாத ஒழிப்புக்கான ஒப்பந்தம், முதலீடுகளைஅதிகரிக்கும் இருநாடுகளுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

மேலும் டெல்லியில் நாளை நடைபெற இருக்கும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சவுதி மன்னர் அப்துல்லாகலந்து கொள்கிறார்.

தீவிரவாதிகள் கைது:

இதற்கிடையே டெல்லியில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ்வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. நாளை டெல்லியில் குடியரசு தின விழா நடைபெற இருக்கும் நிலையில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+