மாநகராட்சி கூட்டம்: கராத்தே தியாகராஜன் வழக்கு!
சென்னை:
சென்னை மாநகராட்சி ஆணையருக்கு, துணை மேயரின் அதிகாரங்கள் வழங்கப்பட்டதை எதிர்த்தும், மாநகராட்சிக் கூட்டத்தைஆணையர் கூட்டியதை எதிர்த்தும் துணை மேயர் கராத்தே தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார்.மேயரும், துணை மேயரும் இல்லாத நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தை ஆணையர் விஜயக்குமாரே மேற்கொண்டுள்ளார்.இந்த நிலையில், கராத்தே தியாகராஜன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,மாநகராட்சி ஆணையருக்கு துணை மேயரின் அதிகாரங்களை வழங்கி கடந்த 16ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுசட்ட விரோதமானதாகும். இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.
இதேபோல பிப்ரவரி 1ம் தேதி ஆணையர் கூட்டியுள்ள கூட்டத்தை ரத்து செய்து, நான் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ள பிப்ரவரி2ம் தேதி மாநகராட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தியாகராஜன் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஓரிரு நாளில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications