இலங்கையில் தமிழ் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை
கொழும்பு:
இலங்கையில் தமிழ் பத்திரிகையாளர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே 2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதற்கு பிறகு ஏற்பட்ட பல்வேறு தாக்குதலில் 151 பேருக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர்.இந்த நிலையில் இலங்கையில் போர் பதற்றம் நிலவுவதால், அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்து கொண்டுஉள்ளனர்.
இதற்கிடையே இலங்கையில் இருந்து வெளிவரும் சுடர் ஒளி தமிழ்ப் பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தசுப்பிரமணியம் சுகிர்தராஜன் (வயது 35) என்பவர் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த போது திரிகோணமலைப் பகுதியில்மர்ம நபர் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பத்திரிகையில் புலிகளுக்கு ஆதரவாக அவர் கட்டுரைகள் எழுதி வந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றுகூறப்படுகிறது. இதே பகுதியில் அரசு ஊழியர் ஒருவரையும் சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதையடுத்துஅந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
5 இடங்களில் குண்டு வெடிப்பு:
இலங்கையில் வன்னி பகுதியில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மற்றும் ஆண்டன் பால சிங்கம் ஆகியோரை நார்வே நாட்டுஅமைச்சர் சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் கொழும்பு நகரில் 5 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.விடுதலைப்புலிகள் தான் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது. இந்த சம்பவத்தில்உயிரிழந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து உடனடி தகவலில்லை. இதனால் கொழும்பு நகரம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications