உடனடி பதில்: ஓ.பியை பாராட்டிய துரைமுருகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொதுப்பணித்துறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அத்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக விளக்கம்அளித்ததற்காக திமுக துணைத் தலைவர் துரைமுருகன் அமைச்சரைப் பாராட்டினார்.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு துரைமுருகன் பேசுகையில், வேலூர் மாவட்டம்போளூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது குறித்து பேசினார். அது தொடர்பானபடங்களையும், சிடியையும் அவர் காட்டினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், செண்பகத் தோப்பு அணைக்கட்டின் கட்டமைப்புப் பணிகள் 96சதவீதம் முடிந்துள்ளது. மாத வாரியாக கட்டமைப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். அதில் குறை இருப்பதற்கானவாய்ப்பே இல்லை.
இருப்பினும் நீங்கள் சொல்வது போல குறைகள் இருந்தால் நிச்சயம் சரி செய்யப்படும் என்றார். இதைக் கேட்டதும் எழுந்ததுரைமுருகன், அமைச்சரின் விளக்கம் திருப்தி தருகிறது.
இப்படித்தான் ஒவ்வொரு கேள்விக்கும் உரிய பதிலை அமைச்சர்கள் அளிக்கவேண்டும். அதை விடுத்து மத்திய அரசை குறைசொல்லக் கூடாது என்று பன்னீர் செல்வத்தைப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications