பாலாறு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்கு தொடரஉத்தரவிட்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின்னர் திமுக உறுப்பினர் துரைருகன் பேசுகையில், ஆந்திர அரசுபாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான அனைத்து ஆய்வுகளையும் முடித்து ஏற்பாடுகளை தயார் செய்து வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை அறிய விரும்புவதாக கூறினார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, பாலாற்றில் அணை கட்டுவது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு கடிதம்எழுதினேன். அதற்கு இதுவரை பதிலே இல்லை. இன்று காலை கூட இப்பிரச்சினை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன்விவாதித்து விட்டுத்தான் சபைக்கே வந்தேன்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு வழக்குதொடரும் என்றார்.

பின்னர் துரைமுருகனின் மற்றொரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த 2001ம் ஆண்டு திமுக ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகிய போது தமிழக அரசின் நிதி நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த நிலையை சரி செய்வது மிகக்கடினம் என்று பொருளாதார நிபுணர்களும், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி ஆகியவை கை விட்டபோது, எனது அரசின் அயராதமுயற்சியின் காரணமாக பொருளாதாரத்தை திறம்பட சமாளித்து சரி செய்து விட்டோம். இது ஒரு மிகப் பெரும் சாதனையாகும்.

தமிழக அரசின் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்யவில்லை.முழுக்க முழுக்க தமிழக அரசே இந்த நிதிச் சுமையை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே மாநில அரசு ஒன்று இவ்வளவுபெரிய அளவில் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது இங்கு மட்டும்தான்.

தமிழக அரசுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவி செய்வதில்லை. சுயாட்சி குறித்து வாய் கிழியப் பேசும் திமுக, மாநில அரசின்அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பேசாமல் இருப்பது ஏன்?

வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது உறுதி. ஆனால் எதிர்க்கட்சிவரிசையிலாவது திமுக அமருமா என்பது சந்தேகம் தான் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+