கருணாநிதி, தயாநிதி மாறன் பதவி விலக சுவாமி கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கேபிள் டிவி விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து தங்களது பதவிப் பிரமாணத்திற்கு விரோதமாக நடந்து கொண்டுள்ளதிமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், கேபிள் டிவி நிறுவனங்களை கையகப்படுத்துவது தொடர்பாகதமிழக அரசு சட்ட மதோதாவைத் தாக்கல் செய்தவுடன் கருணாநிதியும், தயாநிதி மாறனும் ஆளுநரை போய் சந்தித்து, இந்தமசோதாவிற்கு ஒப்புதல் தரக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.இதன் மூலம் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்கும் போது கருணாநிதியும், மத்திய அமைச்சராக பதவியேற்கும் போதுதயாநிதிமாறனும் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு விரோதமாக இருவரும் செயல்பட்டுள்ளனர்.
இதற்குப் பொறுப்பேற்று கருணாநிதி தனது எம்.எல்.ஏ பதவியையும், தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியையும் உடனடியாகராஜினாமா செய்ய வேண்டும்.
மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதேபோல கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் புதிய ஆட்சி விரைவில்பதவியேற்கும் என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications