இந்தியில் தமிழ் இலக்கியங்கள்
சென்னை:
தமிழ் இலக்கியங்களை இந்தியில் மொழி பெயர்த்து வெளியிட ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இலக்கியங்களை இந்தியில் மொழி பெயர்த்து வெளியிட ரூ.5 லட்சம், பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்க ரூ. 10 லட்சம் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக சங்க இலக்கியங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்க நடவடிக்கைஎடுக்கப்படும்.
பிறமொழிகளில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பு பணிகளை முடித்து, நூல் அச்சிடாத வகையில் வைத்துள்ளவர்கள் மூல நூல்மற்றும் மொழி பெயர்ப்பு பகுதி ஆகியவற்றை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, ஹால்ஸ் சாலை, சென்னை - 600 008 என்றமுகவரிக்கு 28.2.2006க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications