தமிழர்களின் கெட்ட பழக்கம்: பாலு கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்:

தமிழர்கள் என்பது உண்மையானால் நாம் மீண்டும் கருணாநிதியை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று மத்தியகப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் திருப்பூரில் நடந்த திமுக வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு டி.ஆர்.பாலு பேசுகையில்,14 வயதில் மொழிப் போராட்டத்தை வழி நடத்திய ஒரே தலைவர் கருணாநிதி மட்டும் தான். அவரது தலைமையில் இந்திமொழியை ஒழிக்க ஒரு படையே கிளம்பியது.

நானும், இந்த இயக்கமும் இன்னும் இருக்கிறோம் என்றால் அதற்கெல்லாம் காரணம் கருணாநிதி மட்டுமே. கடந்த சட்டசபைத்தேர்தலில் நமது கூட்டணி சரியாக அமையவில்லை. அதனால் தான் தோல்வியைத் தழுவினோம்.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சரியாக அமைந்தது. வெற்றியைத் தொட்டோம். கூட்டணி மட்டும் சரியாகஅமைந்தால் போதாது. நாம் செய்த சாதனைகளை மக்களிடையே சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. நல்ல விஷயங்களை தமிழன் சீக்கிரத்திலேயே மறந்து போய் விடுவான். அன்றைக்குஎன்ன நடந்ததோ அதை மட்டுமே ஞாபகத்தில் வைத்திருப்பான்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் ஆட்சி புரிகிறார்கள். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது? யார்இங்கு ஆட்சியில் உள்ளார். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஒரு வரலாறு படைப்பதற்கு உதவியாகஇருந்துள்ளார்.

மத்திய கேபினட் அமைச்சரையே சிறையில் வைத்துப் பார்த்தவர் அவர். அந்த வரலாறு எனக்கு மட்டுமே உண்டு. ஒரு தமிழன்ஆட்சிக் கட்டிலில் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?.

முரசொலி மாறனையும், என்னையும் கைது செய்திருப்பானா? ஜெயலலிதா அடிக்கடி கேட்கிறார், 12 மத்திய அமைச்சர்கள் என்னசெய்தார்கள் என்று. என்ன செய்தோம் என்பதை இங்கிருந்தே நான் கூறத் தயார். நேருக்கு நேர் விவாதத்திற்கு வர அவர் தயாரா?என்றார் டி.ஆர்.பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+