கேக்கை பிய்த்து சாப்பிட காங். விருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஒரு கேக் இருந்தால் அதை ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துத் திண்ணத் தான் தோன்றும். அதே போலத் தான் ஆட்சியில் பங்குவேண்டும் என்று காங்கிரஸார் ஆசைப்படுகிறார்கள் என்று தமிழகத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிகூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக வீரப்ப மொய்லி சென்னைக்குவந்தார். கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவருக்கு காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில்காங்கிரஸார் வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் வீரப்ப மொய்லி ஆலோசனை நடத்தினார். பின்னர் சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் வீரப்ப மொய்லி பேசுகையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொண்டர்கள்விருப்பப்படுகிறார்கள்.

இதைத் தவறு என்று கூற முடியாது. கேக் ஒன்று இருந்தால் அதை ஆளுக்குக் கொஞ்சமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசைவரத்தான் செய்யும். அதுபோலத் தான் ஆட்சியில் பங்கு குறித்த ஆசையும். ஆட்சியில் பங்கு என்பது குறித்து இப்போதைக்குஎதுவும் பேசவில்லை.

தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் கூறுவதற்கில்லை. அதுகுறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் பேசுவோம். முதலில்தொண்டர்களை தேர்தலுக்குத் தயார்படுத்த வேண்டும். அது தொடர்பாகத் தான் விவாதிக்க வந்துள்ளேன்.

திமுக தலைமையிலான கூட்டணி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். கட்சித் தொண்டர்களிடம் அந்த நம்பிக்கைஉள்ளது. கட்சியில் கோஷ்டிப் பூசல் ஒழிக்கப்படும். எனவே திண்டிவனம் ராமமூர்த்தியைப் பேச வருமாறு அழைத்துள்ளோம்.

அவரது பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். அதே போல கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றார் மொய்லி. அதன் பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றுவீரப்பமொய்லி சந்தித்துப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+