கராத்தே அறையில் போலீஸ் சோதனை?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனின் அறையில் போலீஸார் சோதனை நடத்தியதாக வெளியானசெய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள கராத்தே தியாகராஜன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். சில மாதங்களுக்கு முன்புஅவரது துணை மேயர் அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் பல தீயில் கருகி சாம்பலாயின.இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திட்டமிட்ட சதி வேலையாக இது இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் புகார் கூறின.தீவிபத்தைத் தொடர்ந்து அவரது அறை பூட்டப்பட்டு சாவி, பெரியமேடு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பில்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பெரியமேடு போலீஸார் திடீரென மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இதையடுத்து கராத்தே தியாகராஜன்அறையில் அவர்கள் சோதனை போட வந்திருப்பதாக தகவல்கள் பரவின.
ஆனால் இதை போலீஸார் மறுத்தனர். துணை மேயர் அலுவலக அறையின் சாவியை ஆணையர் விஜயக்குமாரிடம் ஒப்படைக்கவந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஆணையரை சந்தித்த போலீஸார் கராத்தே அறை சாவியை அவரிடம்ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications