கருணாநிதியுடன் கார்த்திக் திடீர் சந்திப்பு
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி சேரப் போவதாக அறிவித்துள்ள தமிழக பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், இன்றுதிடீரென திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
தமிழக பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக், தேர்தல் கூட்டணி தொடர்பாக கருத்துதெரிவிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேருவோம். இதுதொடர்பாக விரைவில் முதல்வர் ஜெயலிலதாவை சந்தித்துப்பேசுவேன் என்று அறிவித்திருந்தார்.இந் நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் பிஸ்வாஸ் இன்று சென்னை வந்தார். அவரும், கார்த்திக்கும்நேராக கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினர். சுமார் அரை மணி நேரம் இச் சந்திப்புநடந்தது.
பிஸ்வாஸ் மற்றும் கார்த்திக்கின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி என்ன?
பிஸ்வாஸ் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதேபோல தமிழகத்திலும் திமுக கூட்டணியில் இடம்பெற விரும்புகிறார் பிஸ்வாஸ்.
விஜயகாந்த்துடன் சேர்ந்து வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க இருக்கிறார் கார்த்திக் என்றுகருதப்பட்டு வந்தது. விரைவில் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாகவும் கார்த்திக் கூறியிருந்தார்.
இந் நிலையில் தான் கருணாநிதியை சந்தித்துள்ார் கார்த்திக். ஆனால், இச் சந்திப்புக்கு கார்த்திக் காரணமல்ல என்று தெரிகிறது.பிஸ்வாஸ் வலியுறுத்திய காரணத்தால்தான் அவருடன் கார்த்திக் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
தேசிய அளவில் காங்கிரஸ் அணியில் பிஸ்வாஸ் தலைமையிலான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இடம் பெற்றுள்ளது.தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. பார்வர்ட் பிளாக் கட்சியின் பிஸ்வாஸ் பிரிவு தமிழகத்தில்எந்த அணியிலும் இதுவரை இல்லை. அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. சந்தானம், தனிப்பட்ட முறையில் அதிமுகவுக்கு ஜால்ராஅடித்து வருகிறார்.
இதனால் சந்தானம் மீது பிஸ்வாஸ் கடுப்பில் இருந்தார். அவரை டம்மியாக்வே கார்த்திக்கை தலைவராக்கினார். இதனால் தேர்தல்சமயத்தில் சசிகலா-அமைச்சர் பன்னீர்செல்வம் உதவியுடன் சந்தானம் அதிமுகவில் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற பிஸ்வாஸ் விரும்புகிறாராம். ஆனால் இதற்கு கார்த்திக்உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.
சரி அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். தேசிய அளவில் மதசார்பற்ற கட்சிகளில் பார்வர்ட் பிளாக்கைப் போலவே திமுகவும்மிக முக்கியமான கட்சி. இதனால் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக போய் பார்ப்போம் என்று வலியுறுத்தியே, கார்த்திக்கைஅழைத்துக் கொண்டு கோபாலபுரம் வந்தாராம் பிஸ்வாஸ்.
அதே நேரத்தில் தமிழக அரசியல் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரத்தை கார்த்திக்குக்குத் தந்துவிட்டாதாக அவரதுதரப்பினர் நிருபர்களிடம் காதைக் கடித்தனர்.
எனவே கார்த்திக், பிஸ்வாஸ், கருணாநிதி சந்திப்பை வைத்து திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் இணையும் என்று முடிவு கட்டிவிட முடியாது என்கின்றனர்.
கார்த்திக்கைப் பொறுத்தவரை தனித்துப் போட்டியிட்டு முக்குலத்தோர் வாக்குகள்ை பிரித்து அதிமுகவுக்கு சங்கடம்ஏற்படுத்தவோ, சசிகலாவை பகைத்துக் கொள்ளவோ தயாராக இல்லையாம்.
கார்த்திக்கை கூட்டணியில் சேர்க்க அதிமுக விரும்பினாலும், நடிகரான அவர் கூட்டணிக்குள் வந்தால் எதிர்காலத்தில்அதிமுகவுக்கே தலைமைப் பதவியையே அவர் குறி வைத்தால் என்ன செய்வது என்ற பயமும் உள்ளதாம்.
அதே நேரத்தில் கூட்டணியில் சேர்க்காவிட்டால் தனித்துப் போட்டியிட்டு அதிமுக பெருமளவில் நம்பியிருக்கும் முக்குலத்தோர்சமூக வாக்குகளை தென் மாவட்டங்களில் பிரிப்பார். இது திமுகவுக்கு சாதகமாகக் கூடும்.
இதனால் கார்த்திக்கை கூட்டணியில் சேர்ப்பதா இல்லையா என்ற குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதே நேரத்தில் அதிமுகவுடன்கூட்டணிக்காக பல வகைகளிலும் முயன்று வருகிறார் கார்த்திக்.












Click it and Unblock the Notifications