குடியரசு தினவிழா: கோலாகல கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாட்டின் 57வது குடியரசு தினவிழா மிக பலத்த பாதுகாப்புக்கு இடையே கோலாகலமாகவும், மிக உற்சாகத்துடனும்கொண்டாடப்பட்டது.

டெல்லியில் நடந்த வண்ணமிகு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அப்துல் கலாம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செளதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் பங்கேற்றார். பிரதமர் மன்மோகன் சிங்,மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஆகியோர் பங்கேற்ற இந்த அணி வகுப்பில்நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் பல பிரிவு வீரர்கள் அணி வகுத்துச் சென்றனர்.

நாட்டின் அனைத்த மாநிலங்களின் சார்பிலும் கலாச்சார செறிவை வெளிப்படுத்தும் ஊர்திகளும், கலைஞர்களும் ஆடிப் பாடிச்சென்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு இந்த அணி வகுப்பு மிகக் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கானமக்கள் இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.

ராணுவ, கடற்படை, விமானப் படையினரின் பலத்தை வெளிப்படுத்தும் ஆயுதங்கள் தாங்கிய வாகனங்கள், டாங்கிகள்,ஏவுகணைகள் ஆகியவையும் அணி வகுப்பில் இடம் பெற்றன.

விமானப் படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிருத்வி ஏவுகணையும் அதை ஏவும் இந்திரா- பிசி 2 ரக ரேடார் வாகனமும்ஊர்வலத்தில் சென்றது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட பினாகா மல்டி பேரல் ராக்கெட், அர்ஜூன் டாங்கிகள், இந்தியா-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பானபிரம்மோஸ் ஏவுகணை ஆகியவையும் அணிவகுப்பில் இடம் பெற்றன.

அக்னி ஏவுகணை, டிங்குஸ்கா விமான எதிர்ப்பு ஏவுகணை, கண்ணி வெடிகளை அகற்றும் வாகனம், இஸ்ரேல் தயாரிப்பானசோல்டம் ஆர்ட்டிலரிகள் ஆகியவையும் அணி வகுத்துச் சென்றன.

பிரம்மோஸ் ஏவுகணையை வடிவமைத்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான ஜனாதிபதி அப்துல் கலாம் அது குறித்து செளதிமன்னருக்கு விளக்கம் தந்ததைப் பார்க்க முடிந்தது.

எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பாரா மிலிட்டரிப் படையினரின் அணிவகுப்பும்நடந்தது.

முன்னதாக போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவிடமான அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மன்மோகன் சிங் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செங்கோட்டையில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி வைக்க 21 குண்டுகள்முழங்கப்பட்டன.

தமிழகத்தில்...

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியைஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

காமராஜர் சாலை காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பர்னாலாவை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுமுப்படைத் தளபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் காலை 8 மணிக்கு காந்திசிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பர்னாலா.

பின்னர் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தமிழக அரசின் வீர விருதுகள், மத நல்லிணக்கவிருது உள்ளிட்ட விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இளங்கோ, விமலகீதா, மாஸ்டர் கிறிஸ்டோபர் ஜோசப், வெங்கடேசன் ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணாவிருதுகளைமுதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

அதே போல அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்தியத் தூதரங்கள், இந்திய அமைப்புகளின் சார்பில் குடியரசுதினவிழா கொண்டாடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+