என் கனவை தொண்டர்கள் அறிவர்-வைகோ: கருணாநிதியுடன் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

என் மீது கொண்ட பாசத்தில் சகோதரர்கள் சில வார்த்தைகளை பரிமாறியிருந்தாலும், எனது கனவை என்னுடன் உள்ள கழகத்தோழர்கள் அறிவர் என்று வைகோ கூறியுள்ளார்.

தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் சென்னை தியாகராய நகரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள்பொதுக் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்றினார்.

கூட்டணி தொடர்பாக நிலவி வரும் கருத்துக்களுக்கு உறுதியான பதில் தரும் வகையில், வைகோவின் பேச்சு இருக்கும் என்றஎதிர்பார்ப்பு நிலவியதால் பெரும் கூட்டம் வைகோ பேச்சைக் கேட்க கூடியிருந்தது.

திமுக கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக மதிமுகவினர் மத்தியில் நிலவி வரும் சலசலப்புகளுக்கு மறைமுகமாக பதில் அளித்துப்பேசினார் வைகோ. அவர் பேசுகையில், இதே இடத்தில் தான் கடந்த 1974ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி தந்தை பெரியார் தனதுவாழ்நாளில் கடைசி முறையாக பொதுக் கூட்டத்தில் பேசினார். மறைந்தாலும் மக்கள் மனதில் பெரியார் வாழ்கிறார்.

ஆசை கதவுகள் ஆயிரமாயிரம் அலைமோதும் நெஞ்சம் கொண்ட சகோதரர்கள் பாசம் காரணமாக சில வார்த்தைகளைபரிமாறினாலும், என் கனவை என்னுடன் உள்ள கழகத் தோழர்கள் அறிவார்கள். கடந்த 13 ஆண்டுகளில் நமது தோழர்கள்எத்தனை பேருக்கு பதவி கிடைத்து விட்டது? பதவி கிடைக்காததற்காக நாம் வருத்தப்பட்டோமா? லட்சியத்திற்காக வாழும்கழகம் மதிமுக.

எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறதோ, அந்த இலக்கை நோக்கி போய்க் கொண்டிருப்போம். பாதை மாற மாட்டோம். என்னைப்பொதுச் செயலாளராக்கினீர்கள். உங்களது நலன் தான் எனது நலம். நீங்கள் சந்தோஷப்பட்டால் நானும் சந்தோஷப்படுவேன்,நீங்கள் கவலைப்பட்டால் நானும் கவலைப்படுவேன்.

நான்கு பேரின் பரிகாசத்திற்கு நீங்கள் ஆளாகக் கூடாது என்று நினைக்கிறேன். அந்த நிலைக்கு உங்களை ஆளாக விட மாட்டேன்.என் இயக்கத் தொண்டர்கள் எனக்கு ஒரு கவுரவத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் தான் நான், என்னை விட இயக்கம் வளர்ந்தது.

என்னைப் போன்றவர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல, என்னை விட இயக்கம் உயர்ந்தது. என்னை விட இயக்கத் தொண்டர்களின்நலன் உயர்ந்தது. என்ன புதிர் போடுகிறான், எந்த இடத்திற்கு வருகிறார் என்பது புரியவில்லையா? எல்லா நாட்களிலும்உன்னைத் தயார்படுத்திக் கொள். எல்லா நாட்களையும் சமமாக கருது. பட்டரையாக இருக்கும் போது அடி வாங்கிக் கொண்டுஇரு.

ஒரு நாள் சம்மட்டி ஆகும் போது தாக்கு. ஓ பாசிட்டிவ் ரத்தம் என்று பேசினேன். அது விமர்சனமாகி விட்டது. எதற்காகசொன்னேன்? 12 வகை ரத்தத்திற்கும் ஓ பாசிட்டிவ் ரத்தத்தை கொடுக்கலாம் என்றேன்.

ஓ பாசிட்டிவில் மதிமுகவை சேர்த்து எந்தக் கட்சிக்கும் கொடுப்போம் என்றேன். எங்கும் சேரும், எதிலும் சேரும் என ஒவ்வொருபத்திரிக்கையும் ஒவ்வொரு அர்த்தத்தில் எழுதி விட்டார்கள். அது அவர்களது உரிமை. என்னை விட முக்கியம், இந்த இயக்கம்வளர்வது. இந்த இயக்கம் வளர வேண்டாமா? இந்த இயக்கம் வளர்ந்தால் தமிழகத்திற்கு நல்லது தானே? அமைதியாகஇருக்கிறார்களே இவர்கள், பயந்தவர்கள் என்றார்கள்.

பயம் எங்கள் நிழலைக் கூடத் தீண்டாது. தாக்குதலை தாங்கும் துணிச்சல் மதிமுகவின் ஒவ்வொரு சகோதரனுக்கும் உண்டு. சாதி, மதபேதமற்ற அமைப்பு இது. எங்களால் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்பட்டதுண்டா? மதக் கலவரத்திகு மதிமுககாரன் காரணமாகஇருந்திருக்கிறானா? குமரி முதல் திருத்தணி வரை தமிழகத்தின் அத்தனை மூலையிலும் எங்களது தோழர்கள் இருக்கிறார்கள்.

எங்கள் இயக்க கண்மணிகளை நான் உயிருக்கும் மேலாக கருதுகிறேன். அவர்களது உணர்வுகளை மதிக்கிறேன். அவர்கள் தான்இயக்கம் என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார் வைகோ.

வைகோவின் பேச்சைப் பார்க்கும் போது கூட்டணி தொடர்பாக அவர் பல கருத்துக்களை தனது தொண்டர்களுக்குப் பூடகமாகவிளக்கியுள்ளதாகவே தெரிகிறது. அதாவது, உங்களது உணர்வுகளை மதிக்கிறேன், நீங்கள் சொல்வதைக் கேட்பேன்,தேவைப்பட்டால் கூட்டணி மாறவும் தயங்க மாட்டேன் என்பது போன்ற ஒரு கருத்தும் அதில் தெரிகிறது.

அதே சமயம், எனக்கு எந்த அவமரியாதை ஏற்பட்டாலும் சரி, அதை விட பெரியது மதிமுகவின் வளர்ச்சி, அதனால் இயக்கத்தின்வளர்ச்சிக்காக எனக்கு ஏற்படும் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு திமுக கூட்டணியில் இருப்போம் என்ற ரீதியிலான ஒருகருத்து.

இதில் எந்தக் கருத்து வெல்லப் போகிறது, வைகோவின் தெளிவான நிலை என்ன என்பது போகப் போகப் புரியும்.

கருணாநிதியுடன் சந்திப்பு:

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார் வைகோ.

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில் இச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம்பெற்றுள்ளது.

மதிமுகவுக்கு கெளரவமான இடங்கள், அதாவது பாமகவுக்கு சமமான இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என திமுகவிடம்வைகோ கோரி வருகிறார். ஆனால், பாமகவுக்கு 24 இடங்களும் மதிமுகவுக்கு 16 இடங்களும் தர கருணாநிதி முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உரிய இடங்கள் தரப்படாவிட்டால் அதிமுகவுடன் கூட்டணி சேரவும் தயங்க மாட்டோம் என்று மதிமுக மறைமுகமாகக் கூறிவருகிறது.

இந் நிலையில் இன்று வைகோ கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுஇடங்கள் பகிர்வு குறித்தும், தனது கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்ள் பலரும் திமுகவுக்கு எதிராக பேசி வருவது ஏன்என்பது குறித்தும் வைகோ விளக்கியதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+