ரூ.65 கோடி சேர்த்த ஜெ பேசலாமா?-வாசன்
சென்னை:
காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேச ஜெயலலிதாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் வாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது, மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தமுதல்வர் ஜெயலலிதா 65 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக பெங்களூர் தனி கோர்ட்டில் வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை.தியாகிகளுக்கு காங்கிரஸ் கட்சி எதையுமே செய்யவில்லை என்று முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கும் விதமாக முதல்வர்ஜெயலலிதா சட்டசபையில் பேசியிருக்கிறார். முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணவேணி ஏற்கனவே ஓய்வூதியமாக ஆறாயிரம் ரூபாய்பெற்று வருகிறார். மேலும் தியாகிகள் என்ற தகுதியுடையவர்கள் அனைவருக்கும் மத்திய அரசும், மாநில அரசும் ஓய்வூதியம்வழங்குகிறது.
கேபிள் டிவி மசோதாவை முன்புறமாகவோ, பின்புறமாகவோ, கொல்லைப் புறமாகவோ தாக்கல் செய்தது அரசின் பலவீனத்தைகாட்டுகிறது. அரசியல் உள்நோக்கம் கொண்டது.
திமுக கூட்டணியில் எதிர்பார்க்கும் இடம் கிடைக்கவில்லை என்றாலும் வெற்றிக்காக பாடுபடுவோம். தொகுதிப் பங்கீடு குறித்தமுடிவை அகில இந்திய காங்கிரஸ் எடுக்கும். இங்குள்ள நிலைமையை தலைமையிடத்திடம் நாங்கள் தெரிவிப்போம் என்றுகூறினார்.












Click it and Unblock the Notifications