ரயில்களை குண்டு வைத்து தகர்ப்போம்: தீவிரவாதிகள் மிரட்டல்
சேலம்:
சேலம் ரயில் நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதை தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கிறது.
சேலம் ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் சேலம் ரயில் நிலைய அதிகாரி சாலமன்செவத்தையாவுக்கு வந்தது. அந்த கடிதத்தில் அனுப்புனர் என்ற முகவரியில் மாசாணமுத்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,சென்னை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.மேலும் கடிதத்தில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நிறைவேற்றாவிட்டால் வரும் 3ம் தேதி 10 ரயில்களைகுண்டு வைத்து தகர்ப்போம் என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் இது அலாவூதினின் எச்சரிக்கை என்று குறிப்பிடப்பட்டுஇருந்தது.
கடிதத்தில் எழுதப்பட்டிருந்த கோரிக்கைகளாவன:
தமிழகம் முழுவதும் சிறையில் வாடும் முஸ்லிம் சிறை வாசிகளை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்துவதையும், சித்ரவதைசெய்வதையும் உடனே நிறுத்த வேண்டும்.
எந்த வித விசாரணையும் இன்றி 9 வருடங்களாக சிறையில் வாடும் 300 முஸ்லிம் சிறைவாசிகளை ஜாமீனில் விட வேண்டும்.
முஸ்லிம் சிறைவாசிகளை கொடுமைபடுத்திக் கொண்டுள்ள சிறை அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
எங்கள் இனத்தை இழிவு படுத்தும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இமாம் அலியை சுட்டுக் கொன்ற மாவீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டிருந்தது. இது குறித்து உடனே செவத்தையா சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீசார்சென்னை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சென்னை போலீசார் இந்த கடிதம் சென்னையில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருகிற 4ம் தேதி சேலத்தில் நடைபெறும் 4 வழிச்சாலை தொடக்கவிழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். மேலும்திமுக தலைவர் கருணாநிதி உள்பட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில்இந்த மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications