மூப்பனாரின் முதல் சிலை புதுவையில் திறப்பு
பாண்டிச்சேரி:
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனாரின் முதலாவது சிலை புதுவையில் திறக்கப்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவியவருமான ஜி.கே.மூப்பனாருக்கு புதுவையில்சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை புதுவை மாநில அரசு நிறுவியுள்ளது.
மூப்பனாருக்கு அமைக்கப்பட்டுள்ள முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை திறப்பு விழா புதுவையில்நடந்தது. விழாவில் புதுவை முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மூப்பனாரின்மகனும், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சருமான ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.
மத்திய அமைச்சரான பின்னர் வாசன் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது தான் என்பதும் நிகழ்ச்சியின் விசேஷ அம்சமாகும்.நிகழ்ச்சியில் வாசன் பேசுகையில், மூப்பனாருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே நிலவி வந்த நட்பு கலந்த உறவைநினைவு கூர்ந்தார்.












Click it and Unblock the Notifications