சென்னை: மாநகராட்சியிலிருந்து திமுகவினர் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர். நகர் கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்ததற்கு தமிழக அரசே பொறுப்பு என்று கூறியுள்ள உச்சநீதிமன்றத்தீர்ப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததைக் கண்டித்து கோஷமிட்ட திமுக கவுன்சிலர்கள் அவையிலிருந்துவெளியேற்றப்பட்டனர்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று காலை கூடியது. ஆணையர் விஜயக்குமார் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.அவை கூடியதும் எதிர்க்கட்சி திமுக தலைவர் சி.வி.மலையன் எழுந்து எம்.ஜி.ஆர். நகர் சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதிகோரினார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் ஆணையரைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும்திமுகவை எதிர்த்து கோஷம் போட்டனர். இதனால் அவையில் அமளி துமளி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து காவலர்கள் உள்ளே வந்துதிமுகவினரை குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.

இதைக் கண்டித்து காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இந்த அமளியைத்தொடர்ந்து நிதி நிலை அறிக்கையை உறுப்பினர் விஜய ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+