சபாநாயகர் காளிமுத்து ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியிலிருந்து காளிமுத்து விலகி விட்டார். அவரது பொறுப்புகளை துணை சபாநாயகர் வரகூர்அருணாச்சலம் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக அவைத் தலைவராக காளிமுத்து நியமிக்கப்படக் கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியின் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர்தேவை என்று உணர்ந்த அதிமுக தலைமை, அதற்கு காளிமுத்து தான் சரியான தலைவர் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து காளிமுத்துவுக்கு அவைத் தலைவர் பொறுப்பைக் கொடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவின் பிரச்சாரபீரங்கியாக அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக இன்று காலை காளிமுத்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக சட்டசபைசெயலக செயலாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சபாநாயகர் காளிமுத்து இன்று காலை தனது பதவியைராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகர் பதவி தற்போது காலியாகி விட்டதால் சபாநாயகரின் பொறுப்புகள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலத்திடம்ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

காளிமுத்து விலகி விட்டதைத் தொடர்ந்து வருகிற 4ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில்அவைத் தலைவராக காளிமுத்து நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+