குஷ்பு படம்: புத்தக நிலையங்களில் போலீஸ் ரெய்டு
சென்னை:
மேக்ஸிம் ஆங்கிலப் பத்திரிக்கையில் ஆபாசப் படம் வெளியானது தொடர்பாக சென்னை நகரில் உள்ள புத்தக விற்பனைநிலையங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.
லண்டனைச் சேர்ந்த மேக்ஸிம் பத்திரிக்கையின் இந்தியப் பதிப்பில் நடிகை குஷ்புவின் படம் மிகவும் ஆபாசமான முறையில்மார்பிங் செய்து வெளியிடப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகைப்படத்தை வெளியிட்ட பத்திரிக்கைபதிப்பாளர், ஆசிரியர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம் குஷ்புபுகார் கொடுத்துள்ளார்.இந்தப் புகாரின் பேரில் சென்னை போலீஸார் படு சுறுசுறுப்பாக நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மத்திய குற்றப் பிரிவு துணைஆணையர் மாரியப்பன், உதவி ஆணையர் லட்சுமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் நடவடிக்கையில் குதித்துள்ளனர். சென்னை நகரில் உள்ள புத்தக விற்பனை நிலையங்களில், மேக்ஸிம்பத்திரிக்கை விற்கப்படுகிறதா என்று போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 120க்கும் மேற்பட்ட புத்தகங்கள் சிக்கியுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களில் அதன் ஆசிரியர், நிருபர்கள், தொலைபேசி எண், இ மெயில் முகவரி ஆகியவை உள்ளன.இருப்பினும் புத்தகம் அச்சிடப்படும் மும்பை அலுவலக முகவரி இடம்பெறவில்லை.
விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக குஷ்புவிடம் விசாரணை மேற்கொள்ள போலஸீார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications