திருட்டு வீடியோ வழக்கில் அழகிரி விடுதலை
மதுரை:
அனுமதி இல்லாத வீடியோ கேசட்டுகளை விற்பனை செய்ததாக திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து மதுரை விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மதுரை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ராயல் வீடியோ கடையில் போலீஸார் சோதனை நடத்தினர்.இதில் அனுமதி பெறாமல் 4,000க்கும் மேற்பட்ட வீடியோ கேசட்டுக்கள் இருந்ததாக கூறி அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அழகிரி, கடையின் மேலாளர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காபிரைட் சட்டத்தின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை மதுரை ஐந்தாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அழகிரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து 2வது விரைவு நீதிமன்றத்தில் அழகிரி மேல் முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சேகர், அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து தற்போது அழகிரி மீது தா.கிருட்டிணன் கொலை வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications