அள்ளு அள்ளு.. நெசவாளர்களுக்கு ஜெ புது சலுகை
சென்னை:
விசைத்தறி நெசவாளர்களுக்கு திடீரென மின் கட்டண சலுகை வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் வரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,துணி உற்பத்தி செய்வதிலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதிலும் முன்னிலை வகிக்கும் விசைத்தறி தொழில், ஏற்றுமதிசெய்வதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
இந்த தொழிலாளர்கள் தற்போதைய மின் கட்டணத்தை குறைத்து விசைத்தறி தொழில் மேலோங்க உதவிட வேண்டும் என்றுவிசைத்தறி நெசவாளர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை குறைக்க நான் தற்போது முடிவெடுத்துள்ளேன்.
இதன் படி 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் அடிப்படையில் முதல் 1,000 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய்வீதமும், 1001 முதல் 1,500 யூனிட்டுகள் வரை யூனிட் ஒன்றுக்கு 2.25 ரூபாய் எனவும், 1,501 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட்ஒன்றுக்கு 2.50 ரூபாய் என்றும் மின் கட்டணம் விதிக்கப்படும்.
இவ்வாறு குறைக்கப்படும் மின் கட்டண வீதம் அனைத்து விசைத்தறி நுகர்வோருக்கும் பொருந்தும். இதனால் ஆண்டு ஒன்றுக்குதமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பான 30.73 லட்சம் ரூபாயை எனது அரசு மின்சார வாரியத்திற்கு மானியமாகவழங்கும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications