வதந்திகளை நம்பாதீர்: கருணாநிதி வேண்டுகோள்
சென்னை:
தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆட்சியாளர்களும், உளவுத் துறையினரும், பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் பரப்பும்வதந்திகளை கூட்டணிக் கட்சியினர் நம்பக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது,திமுகவில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சீராகவும், சிறப்பாகவும் இல்லை என்று அதிருப்திதெரிவித்திருந்தார்.இதற்குப் பதிலளிக்கும் விதமாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டணியின் ஒற்றுமையை சீரழிக்கும்வகையில் வெளியாகும் செய்திகளை மறுத்து ஒற்றுமையைக் காக்க வேண்டியது திமுகவின் பொறுப்பு என்று வரதராஜன்கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொள்கிறேன்.
அதேசமயம், உளவுத்துறை, ஆளுங்கட்சி ஆகியோரால் பரப்பப்படும் வதந்திகளை உடனுக்குடன் தடுத்து நிறுத்த கூட்டணிக்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும், துணை நிற்க வேண்டும்.
கூட்டணியின் ஒற்றுமையை குலைக்க நினைப்போரின் திட்டம் நிறைவேற யாரும் இடமளிக்கக் கூடாது. தொகுதிப் பங்கீடுதொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் முறைப்படி தொடங்கவில்லை. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானபின்னர்தான் முறைப்படியான பேச்சுவார்த்தை தொடங்கும்.
ஆனால் தொகுதிப் பங்கீடு தொடங்கி விட்டது, பேச்சுவார்த்தையில் சிக்கல் என சில பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள்வதந்திகளை வெளியிட்டு வருகின்றன. தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட்ட பின்னரே தொகுதிப் பங்கீடு தொடர்பானபேச்சுவார்த்தை தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications