இலங்கை: தமிழ் எம்பிக்கள் வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழர் கட்சிகளைச் சேர்ந்த எம்பிகள் நாடாளுமன்றத்தைபுறக்கணித்தனர்.
தமிழர்கள் மீது இலங்கை ராணுவமும், கருணா பிரிவினரும் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புலிகள் ஆதரவுகட்சியாக கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி எம்பி சுரேஷ் பிரேம்சந்திரன், நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச்செய்தார்.
இதை தொடர்ந்து, தமிழர்கள் மீதான தாக்குதல் மற்றும் தமிழர் அமைப்பை சேர்ந்தவர்கள் கடத்தப்பட்டுள்ளது போன்றசம்பவங்கள் தொடர்ந்தால் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுக்கு தடை ஏற்படும் என்று கூறி அரசைக் கண்டித்துமேலும் 22 தமிழ் எம்பிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications