டிஎஸ்பியை நோக்கி துப்பாக்கி தூக்கிய எஸ்ஐ
பாண்டிச்சேரி:
தன்னை திட்டிய டிஎஸ்பியை நோக்கி துப்பாக்கியை தூக்கிய எஸ்ஐயை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தால் டிஎஸ்பிஅலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலையங்களுக்கு தீவிரவாதிகள் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களுக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் எஸ்ஐ கோவிந்தன் ஈடுபட்டிருந்தார்.அப்போது பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட வந்த டிஸ்பி முரளி, பூத்தில் அமர்ந்திருந்த எஸ்ஐ கோவிந்தனை பார்த்து இங்குஎன்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பயணிகளைசோதனை செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் கோவிந்தன்.
இதை கேட்டதும் கோபமடைந்த டிஎஸ்பி உன் உடம்பில் ரத்தம் ஓடுதா? சாக்கடை ஓடுதா? எந்த வேலையும் செய்யாமல்முலையில் வந்து உட்கார்ந்திருக்கே என சத்தம் போட்டார்.
இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சார் என் உடம்புல ஓடுறது நல்ல ரத்தம் தான். எங்க அப்ப அம்மாகொடுத்த நேர்மையான ரத்தம் தான் ஓடுது என்று உணர்ச்சி வசப்பட்டார் கோவிந்தன்.
உடனே அங்கிருந்து சென்ற டிஎஸ்பி முரளி எஸ்ஐ கோவிந்தனை தனது அலுவலகத்துக்கு அழைத்து சாந்தமாக பேசியுள்ளார்.
உங்களை திட்டறதுக்கு எனக்கு உரிமையில்லையா? என டிஎஸ்பி கேட்க திட்றதுக்கு உரிமை இருக்கு சார், ஆனா என் உடம்பில்ஓடும் ரத்தம் குறித்து ஆராய்ச்சி செய்யக் கூடாது என்று சூடாக பதிலளித்தார் கோவிந்தன்.
இது குறித்து மீண்டும் எழுந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த எஸ்ஐ கோவிந்தன் தனது கைத் துப்பாக்கியை எடுத்தார். இதனால்பதறிப்போன போலீசார் உடனே கோவிந்தனை மடக்கி பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து மேலதிகாரிகளிடம் எஸ்ஐ கோவிந்தன் சரியாக நடந்து கொள்வதில்லை என்று புகார் எழுதிய, டிஎஸ்பி அங்கிருந்தமாரிமுத்து, மல்லிகா உள்பட 4 போலீஸ்காரர்களிடமும் சாட்சி கையெழுத்து வாங்கி உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications